என் மலர்
நீங்கள் தேடியது "Congress interview"
- வேலூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பேட்டி
- பிரதமர் மோடியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றது ஜனநாயக முறை
வேலூர்:
வேலூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொன்னேரி துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி மன்னர் ஆட்சியை போல் செயல்படுகிறார். ஜனநாயகத்தின் குரல் வலையை நெரிக்கிறார்.ராகுல்காந்தி நாட்டு மக்களுக்காக பல்வேறு கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பியதை பொறுக்க முடியாத மோடி ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்துள்ளார்.
இதனை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.பிரதமரின் நண்பரான அதானியும், அம்பானியும் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள்.ஏழை மக்களுக்கு எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை.
100 நாள் வேலை திட்டத்தில் கூட நிதியை குறைத்துவிட்டார்கள்.இதனால் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.நேற்று பிரதமரை தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றது ஜனநாயக முறை.
பிரதமருக்கு அரசியல் நாகரீகத்துடன் வரவேற்பளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் டீக்காராமன் உடனிருந்தார்.






