என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு கட்ட ஆணை"

    • அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்
    • கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்பு

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த பெரிய ஊனை ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பில் வீடுகட்ட தலா ரூ.3 லட்சம் வீதம் 15 பயனாளிகளுக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான அரசானை வழங்கி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலெக்டர்குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, தாசில்தார் ரமேஷ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, ஒன்றிய குழு தலைவர் சி.பாஸ்கரன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு பணி ஆணையை வழங்கினார்.

    • ரூ.4,37,430 மதிப்பில் வீடு அமைகிறது
    • சோளிங்கர் ஒன்றிய அலுவகத்தில் நிகழ்ச்சி நடந்தது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளத்தேரி சித்தாதூரை சேர்ந்த ரஜினி என்பவருக்கு பழங்குடியினர் நல திட்டம் நிதியில் இருந்து ரூ.4,37,430 மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சோளிங்கர் ஒன்றிய அலுவகத்தில் நடந்தது.

    ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வஜ்ரவேல், சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் மாரிமுத்து, ராமன், முனியம்மாள் பிச்சாண்டி, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4880 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை மற்றும் சாவிகளை வழங்கினார்.
    • அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலை சேர்ந்த 48 பேருக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 4,880 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் சாவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் "அனைவருக்கும் வீடு" திட்டத்தில் பயனாளிகள் தாங்களாக வீடு கட்டிக் கொள்ளும் பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த 48 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டது

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதியில் அதிக அளவில் இத்திட்டத்தினை செயல்படுத்தி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு இத்திட்டம் குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் பல்வேறு விளம்பரங்களை மேற்கொண்டு விழிப்பு–ணர்வு ஏற்படுத்திட வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குறைதீர் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்க–ளுக்கும் இத்திட்டம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் துண்டு பிரசு ரங்களை அச்சடித்து வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசுகையில்,

    "அனைவருக்கும் வீடு" வழங்கும் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியம் வீடுகள் கட்டும் பணியில் பல்வேறு நிலைகளில் வழங்க–ப்படுகிறது. கொடைக்கானல் நகராட்சியில் 48 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1.01 கோடி ஆகும். "அனைவருக்கும் வீடு" வழங்கும் திட்டத்தில் பழனி சட்டமன்ற தொகுதியில் 952 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. பழனி ஊராட்சி ஒன்றியம், தாதநாயக்கன்பட்டி ஊராட்சியில் 264 குடும்ப–ங்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×