என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் தாங்களாகவே வீடு கட்டிக்கொள்ளும் பணி ஆனணயினை கலெக்டர் விசாசன் மற்றும் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.
நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொடைக்கானலை சேர்ந்த 48 பேருக்கு வீடு கட்ட ஆணை
- தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4880 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை மற்றும் சாவிகளை வழங்கினார்.
- அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலை சேர்ந்த 48 பேருக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 4,880 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் சாவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் "அனைவருக்கும் வீடு" திட்டத்தில் பயனாளிகள் தாங்களாக வீடு கட்டிக் கொள்ளும் பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த 48 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டது
இதில் கலெக்டர் பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதியில் அதிக அளவில் இத்திட்டத்தினை செயல்படுத்தி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு இத்திட்டம் குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் பல்வேறு விளம்பரங்களை மேற்கொண்டு விழிப்பு–ணர்வு ஏற்படுத்திட வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குறைதீர் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்க–ளுக்கும் இத்திட்டம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் துண்டு பிரசு ரங்களை அச்சடித்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசுகையில்,
"அனைவருக்கும் வீடு" வழங்கும் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியம் வீடுகள் கட்டும் பணியில் பல்வேறு நிலைகளில் வழங்க–ப்படுகிறது. கொடைக்கானல் நகராட்சியில் 48 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1.01 கோடி ஆகும். "அனைவருக்கும் வீடு" வழங்கும் திட்டத்தில் பழனி சட்டமன்ற தொகுதியில் 952 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. பழனி ஊராட்சி ஒன்றியம், தாதநாயக்கன்பட்டி ஊராட்சியில் 264 குடும்ப–ங்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.






