என் மலர்
உள்ளூர் செய்திகள்

15 பேருக்கு வீடுகட்ட ஆணையை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.
அணைக்கட்டில் ரூ.45 லட்சத்தில் 15 பேருக்கு வீடு கட்ட ஆணை
- அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்
- கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்பு
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த பெரிய ஊனை ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பில் வீடுகட்ட தலா ரூ.3 லட்சம் வீதம் 15 பயனாளிகளுக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான அரசானை வழங்கி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலெக்டர்குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.
அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, தாசில்தார் ரமேஷ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, ஒன்றிய குழு தலைவர் சி.பாஸ்கரன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.வெங்கடேசன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு பணி ஆணையை வழங்கினார்.






