என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பேத்கர் படம் வரைய அதிகாரிகள் எதிர்ப்பு
    X

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விடுதலை சிறுத்தை கட்சியினர்.

    அம்பேத்கர் படம் வரைய அதிகாரிகள் எதிர்ப்பு

    • விடுதலை சிறுத்தை கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • வேலூர் விருப்பாட்சிபுரத்தில் பரபரப்பு

    வேலூர்:

    அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வேலூர் விருப்பாட்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே அப்பகுதி பொதுமக்கள் சார்பில் சுவர் எழுப்பி அம்பேத்கர் உருவப்படம் வரைய ஏற்பாடு செய்து வந்தனர்.

    உருவப்படம் வரைவதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி அணைக்கட்டு தொகுதி பொறுப்பாளர் கோட்டி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :-

    அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவப்படத்தை வரைந்து பிறந்தநாள் விழா கொண்டாட முடிவு செய்துள்ளோம்.

    ஆனால் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சுவரில் படம் வரையாமல் நிறுத்தி வைத்துள்ளோம்.

    எங்களுக்கு படம் வரைய அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    Next Story
    ×