என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் கொட்டிய பெயிண்டையும், மினி வேைனயும் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்துவதை படத்தில் காணலாம்.
டயர் வெடித்து மினி வேன் கவிழ்ந்தது
- நடுரோட்டில் கொட்டி கிடந்த பெயிண்டுகள்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (வயது 29). இவர் சென்னையில் இருந்து மினிவேனில் மாதனூர் பகுதியை நோக்கி பெயிண்டு ஏற்றிச் கொண்டு வேலூர், பள்ளிகொண்டா வழியாக வந்துகொண்டு இருந்தார்.
அப்போது நேற்று பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி அருகே வந்த போது திடீரென டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இதில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து மினி வேன் சாலையில் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்தது.
மினிவேனில் சிக்கி இருந்த டிரைவரை லேசான காயத்துடன் அக்கம் பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி பணியாளர்கள் பொ க்லைன் எந்திரத்தின் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த மினி வேனை அப்புறப்படுத்தினர்.
மேலும் விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






