கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

500 கிராம் பறிமுதல் ேபாலீசார் விசாரணை
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
Published on

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் பஸ்நிலையத்தில் பட்ட பகலிலேயே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது, கையில் பேக்குடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், சுமார் 250 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

அதேபோல், கிடங்கு தெருவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் அந்த நபரும் சுமார் 250 கிராம் கஞ்சாவுடன் இருந்தது தெரியவந்தது.

இவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒடுகத்தூர் அடுத்த அத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி(வயது 39), அஜித்குமார்(23), என்பதும் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒடுகத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து, வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து சுமார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com