காட்பாடி பகுதியில் கூடுதலாக போலீஸ் நிலையம் அமைக்கப்படும்

அமைச்சர் துரைமுருகன் பேச்சு தொடர் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை
காட்பாடி பகுதியில் கூடுதலாக போலீஸ் நிலையம் அமைக்கப்படும்
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகே ரூ15 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை மற்றும் செங்கோட்டையில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரேசன் கடையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்,

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமானதாக இருந்ததில்லை என பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும் பொருட்கள் தரமான பொருட்களாக இருக்க வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாக அனைத்து ரேசன் கடைகளிலும் தரமான பொருட்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது.

காட்பாடியில் 200 படுக்கை கொண்ட பல்நோக்கு மருத்துவமனை இந்தாண்டு தொடங்கப்படும்.காட்பாடியில் கூடுதலாக ெரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காட்பாடி பகுதியில் செயின் பறிப்பு உள்ளிட்ட ஏராளமான குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக போலீஸ் நிலையம் கொண்டு வரப்படும்.இந்த ஆண்டு காட்பாடியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். அங்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

இவ்வாறு அவர் பேசினார்.

கதிர்ஆனந்த் எம்.பி., மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com