என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பள்ளி பஸ்சில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அடுத்த தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 80).

    இவர் இன்று காலை செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பஸ் மூதாட்டி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே காசியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    • விநாயகர் சதுர்த்தி விழாவில் பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    புதுப்பாளையம்:

    செங்கம் அடுத்த பெரிய தள்ளபாடியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 18).

    இவர் முன்னூர்மங்கலம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அருகே உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்தார்.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி அப்பகுதியில் வீட்டின் அருகே நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்தார். நேற்று மாலை விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக மைக் செட் ஒலி, ஒளி அமைக்கப்பட்டு இருந்தது.

    மதன்குமார் மைக்கை கையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த மைக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. இதில் மதன் குமார் தூக்கி வீசப்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

    உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மதன் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து புதுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதன்குமாரின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாளை காலை நடக்கிறது
    • அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு திரு விழாக்கள் நடைபெறுகிறது.

    இதில் முக்கிய திருவிழாவாக 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா திகழ்கிறது. 10 நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர்.

    10-ம் நாள் அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் 2668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

    மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் தீப தரிசனம் காண தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

    இந்து ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 14 -ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி நாளை காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் துலா லக்கினத்தில் நடைபெற உள்ளது.

    பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை காலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும்.

    பின்னர் கோவில் ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெறும்.

    பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அண்ணா மலையார் அருள்பெற வருமாறு கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    • குரங்கு இறந்த தகவலை அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு தெரிவித்தனர்.
    • குரங்கை புதைத்த இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் வசித்து வரும் விநாயகம் என்பவரின் வீட்டின் முன்பு வயது முதிர்ந்த பெண் குரங்கு ஒன்று மூச்சு திணறியப்படி சோர்ந்து அமர்ந்து இருந்ததை பார்த்தனர்.

    உடனே சோர்வுடன் இருந்த குரங்குக்கு தண்ணீர் மற்றும் பழங்கள் கொடுத்தனர். இருப்பினும் அந்த குரங்கு சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து விட்டது.

    குரங்கு இறந்த தகவலை அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு தெரிவித்தனர். ஓய்வு பெற்ற தாசில்தார் உலகநாதன், விலங்கு நல ஆர்வலர் ராஜசேகரன் உள்ளிட்டோர் அடங்கிய கிராம இளைஞர்கள் அந்தக் குரங்கிற்கு இறுதிச் சடங்கை செய்வதற்காக இடம் தேட முடிவு செய்தனர்.

    அதற்குள் இறந்த குரங்கு உடல் கெடாமல் இருக்க பிரிசர் பாக்ஸில் வைத்து பதப்படுத்தினர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் குரங்கின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    பின்பு மேளதாளம் முழங்கி, தேவாரம் பாடி வழி நெடுகிலும் மலர்கள் தூவி மனிதர்களை அடக்கம் செய்வது போன்று குரங்கின் உடலை தோளில் சுமந்து சென்றனர். தொடர்ந்து முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.

    சென்னாவரம் கிராமத்தின் இளைஞர்களின் செயலை வந்தவாசி பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

    மேலும் குரங்கை புதைத்த இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    • ரமேஷ் மற்றும் திலக் ஷனா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்யாறு:

    காஞ்சிபுரம் மாவட்டம் சர்வே தீர்த்த குளத்தை சேர்ந்தவர் ரமேஷ். சென்னையில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி பிரியா, மகள் திலக் ஷனா. இவர்கள் அனைவரும் நேற்று மாலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற திருவிழாவிற்காக பைக்கில் சென்றனர்.

    விழாமுடிந்து இன்று காலை 8.45 மணி அளவில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை தேத்துறை பஸ் நிறுத்தம் அருகே வரும்போது எதிரே வந்த அரசு பஸ் இவர்கள் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது.

    இதில் ரமேஷ் மற்றும் திலக் ஷனா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரியாவை மீட்டு காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அனாக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தந்தை, மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.
    • போலீசார் இளவரசன் மற்றும் பிரவீன் ஆகியோர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வந்தவாசி:

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த எலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 38).

    திருப்போரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி, மகள் பிரசாந்தினி (5), மகன் பிரவீன் (3½).

    இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் உள்ள உறவினரின் பிறந்தநாள் விழாவில் கலந்த கொள்வதற்காக குடும்பத்துடன் காரில் சென்றனர்.

    விழா முடிந்து நேற்று இரவு வீடு திரும்பி கொண்டிருந்தனர். காரை இளவரசன் ஓட்டிச்சென்றார்.

    வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.

    இதில் இளவரசனின் மகன் பிரவீன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

    படுகாயம் அடைந்த இளவரசன் மற்றும் அவரது மகள் பிரசாந்தினியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே இளவரசன் பரிதாபமாக இறந்தார்.

    பிரசாந்தினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மகன், கணவர் இறந்ததால் மீனாட்சி கதறி அழுதார். இது பார்த்தவர்களின் கண்களை கலங்க வைத்தது.

    இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இளவரசன் மற்றும் பிரவீன் ஆகியோர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய போது விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சூறாவளி காற்றுடன் மழை பெய்தது
    • மின் இணைப்பு துண்டிக்கபட்டன

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கபட்டன.

    மேலும் ஆரணி பழைய ஆற்காடு ரோடு அருகே சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ந்ததால் சாலை ஓரமாக இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பம் மீது விழுந்தது.

    இதனால் மின்கம்பம் உடைந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டன.

    இதனையடுத்து தகவலறிந்த வந்த ஆரணி தீயணைப்பு துறை மற்றும் மின்சார வாரியதுறையினர் மின் இணைப்பை துண்டித்து விழுந்து கிடந்த மரத்தை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • தீபாராதனை காண்பிக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அழகு சேனை கிராமத்தில் ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் புரட்டாசி மாத பிறப்பு மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசேஷ பூஜை நடைபெற்றது.

    இதில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • நண்பருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒப்பந்தவாடியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). திருப்பதியில் பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மகன் தமிழரசன் (21). இவர் செய்யாறு கன்னியம்மன் கோவில் தெருவில் பாட்டி வீட்டில் தங்கி பட்டப்படிப்பை முடித்து வேலை தேடி வந்தார்.

    சென்னைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறினார். நேற்று இரவு சென்னையில் உள்ள தனது நண்பருக்கு போன் செய்து எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நான் தூக்கு போட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து செய்யாறில் உள்ள நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக நண்பர்கள் தமிழரசன் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது தமிழரசன் தூக்கு போட்டு தொங்கி நிலையில் கிடந்தார்.

    அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தமிழரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து செய்யாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தமிழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த செம்பூரில் விநாயகர் சதுர்த்தி 2-ம் நாள் பூஜையில் 1008 பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்த பிஸ்கட் அலங்கார விநாயகரை வந்தவாசியைச் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வியப்புடன் பார்த்து தரிசனம் செய்தனர்.

    • இ- சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்யலாம்
    • கலெக்டர் தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கலெக்டர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு செப்டம்பர் 15-ந் தேதி அன்றே உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் எண்களை இணைக்காத வங்கி கணக்குகளுக்கு உரிமைத் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது.

    இதனை சரி செய்து விரைவில் வங்கி கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தை தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம். வங்கியில் வரவு வைத்த அன்றே எடுக்க வேண்டும் என்று சொல்லப்படும் தகவல் தவறானது.

    ஒரே நேரத்தில் அனைவரும் வங்கிக்கு சென்று பணம் எடுப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. வங்கி கடன் மற்றும் சேவை கட்டணத்திற்காக உரிமைத் தொகையை பிடித்தம் செய்யும் வங்கிகள் குறித்து 1100 என்ற கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த திட்டத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றால் 30 நாட்களுக்குள் இ- சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்யலாம்.

    விண்ணப்ப நிலை குறித்து தகவல் அறிய https://kmut.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு சென்று விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

    இந்த திட்டத்தில் ஒரு தகுதியான பெண்கள் கூட விடுபடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மனைவி கைது
    • ஒருவரையொருவர் சர மாரி தாக்கி கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல் பூதேரி கிராமத்தை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 37), கூலி தொழிலாளி.

    இவ ரது மனைவி மைதிலி(35). இவர் சென்னை அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மைதிலியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், நேற்று முன் தினம் இரவு குடிபோ தையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் மைதிலியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, ஒருவரை யொருவர் சர மாரி தாக்கி கொண்டனர்.

    ஆத்திரமடைந்த மைதிலி, மணிகண்டனை கீழே தள்ளிவிட்டார். இதில் அவர் பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்தார்.இதை கவனிக்காத மைதிலி தூங்க சென்றுவிட்டார்.

    நேற்று காலை மைதிலி மயங்கிய நிலை யில் இருந்த மணிகண் டனை எழுப்ப முயன்றார். ஆனால், அவர் எழுந்தி ருக்கவில்லை. அப்போது மணிகண்டன் இறந்தது தெரியவந்தது. இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல றிந்த மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருவண்ணா மலை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மைதி லியை நேற்று கைது செய் தனர். பின்னர், அவரை மாஜிஸ்திரேட் முன்னி லையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×