என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • நடந்து செல்லவும், வாகனங்களில் செல்ல முடியாமல் அவதி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த வாழியூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சமீபத்தில் பெய்த வரும் தொடர் மழையால் அப்பகுதியில் உள்ள தரைப்பாலம் வழியாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்கிறது.

    இதன் காரணமாக பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    இது குறித்து வாழியூர் ஊராட்சியில் கிராமமக்கள் சார்பில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மேம்பாலம் கட்ட எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. எனவே வாழியூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தரைபாலத்தில் உடனடியாக மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை
    • வருகிற 30-ந்தேதிக்குள் கொடுக்க வேண்டும்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வருகிற 30 -ந் தேதிக்குள் விண்ணப்பி க்கலாம் என பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பத்தை சாரோனில் உள்ள திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவல கத்திலும், வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்தவாசியில் உள்ள தி.மு.க. அலுவலகத்திலும் வழங்கலாம்.

    நகர, ஒன்றிய, பேரூர் அமைப்புகளுக்கு ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர். பேரூர் அமைப்புகளுக்கு ஒரு அமைப்பாளர் 3 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.

    தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீண்டும் அந்த பொறுப்புகளுக்கு வர விரும்பினாலும் விண்ணப்பிக்க வேண்டும்.

    முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 30-ந் தேதிக்குள் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் சேர்க்க வேண்டும் என பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    • தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • பஞ்ச மூர்த்திகள் தேர்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    10-ம் நாள் விழாவான நவம்பர் மாதம் 26-ந் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் மகா தீபத்தன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இவ்விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நடைபெற்றது.

    முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சம்பந்த விநாயகர் சன்னதில் இருந்து பந்தக்கால் கோவிலின் ராஜகோபுரம் முன்பு கொண்டு வரப்பட்டது.

    தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தேரடி வீதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் மற்றும் பஞ்ச மூர்த்திகள் தேர்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர். அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்ல மங்கள வாத்தியம் முழங்க ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ், கோவில் இணை ஆணையர் ஜோதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மீனாட்சிசுந்தரம், ராஜாராம், கோமதி குணசேகரன், பெருமாள், சைபர் கிரைம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 2 பேர் படுகாயம்
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை

    போளூர்:

    போளூர் பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் விஷ்வா (வயது 25).கட்டிட மேஸ்திரி. இவர் தனது நண்பர்களான ஆகாஷ் (20) மற்றும் சஞ்சயுடன் (20) வேலை சம்பந்தமாக பைக்கில் தேவிகாபுரம் சென்றனர். வேலைகள் முடிந்து மீண்டும் போளூர் நோக்கி ஒரே பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

    மட்டபிரையூர் அருகே வரும் போது எதிரே வந்த டிராக்டரும் -பைக்கும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.

    இதில் விஷ்வா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக விஷ்வா உள்பட 2 பேரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்வா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போளூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விஷ்வா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை
    • கலெக்டர் உத்தரவு

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள கேளூர் காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 45) என்பவர் கடந்த மாதம் 20-ந் தேதி தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததை கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சந்தவாசல் சப் - இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் கண்டுபிடித்து, பறிமுதல் செய்து அழித்தனர்.

    இவர் ஏற்கனவே பலமுறை சாராய வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதால் பரிமளாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் முருகேஷ், பரிமளாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அருகே கங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் அரசன் (வயது 30). இவர் பைக்கில் நேற்று மாலை வேலை முடிந்து கங்காபுரத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    பெரிய கொழப்பலூர் கூட்ரோடு அருகே வந்தபோது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மினி வேன் மீது இவரது மோட்டார்சைக்கிள் மோதியது.

    இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விஜய் அரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடலை பைக்கில் கட்டி 10 கி.மீ தூரம் தூக்கி ெசன்றார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த சாலைவேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42). விவசாயி. இவர் தனது நிலத்தில் வேர்க்கடலை பயிரிட்டுள்ளார்.

    முயல் வேட்டை

    வயலில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளதால் சுற்றி மின் வேலி அமைத்திருந்தார். அதே பகுதியில் உள்ள இருளர் காலணியை சேர்ந்தவர் சக்திவேல் (18) என்பவர் தனது 17 வயது நண்பனுடன் முயல் மற்றும் எலிகளை வேட்டையாடுவதற்காக வயலுக்கு சென்றார்.

    நள்ளிரவு மின் வேலி ஒயர் இருப்பதை அறியாமல் சக்திவேல் அதனை மிதித்தார். அதிலிருந்து மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த அவனுடன் சென்ற சிறுவன் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஏழுமலை சென்றபோது மின்வெளியில் சிக்கி சக்திவேல் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதனை மறைப்பதற்காக சக்திவேலின் உடலை 10 கிலோ மீட்டர் தொலைவில் எடுத்துக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் பகுதிக்கு பைக்கில் சென்றார். அங்கு அடர்ந்த காட்டுப் பகுதியில் வீசிவிட்டு திரும்பி விட்டார்.

    இச்சம்பவம் குறித்து சிறுவன், சக்திவேல் பெற்றோரிடம் நேற்று காலை தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் கீழ் கொடுங்காலூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஏழுமலையிடம் விசாரணை நடத்தியபோது சக்திவேலின் உடலை ராமாபுரம் காட்டில் கொண்டு போய் வீசியதை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெற உள்ளது.
    • தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு காலை 8.25 மணிக்கு துலா லக்கினத்தில் பந்தக்கால் நடப்பட்டது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.

    மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் நவம்பர் 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெற உள்ளது.

    கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 'மலையே மகேசன்' என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் நவம்பர் 26-ந் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.

    கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    பின்னர் தேரடி முனீஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சமூர்த்திகளின் திருத்தேர்களுக்கு முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு காலை 8.25 மணிக்கு துலா லக்கினத்தில் பந்தக்கால் நடப்பட்டது.

    இதில் கலெக்டர் பா.முருகேஷ், கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கலெக்டர் தகவல்
    • கொசு கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் டெங்கு காய்ச்சலில் இருந்து காத்துக்கொள்ள வீடுகளை சுத்தமாக வைத்து தண்ணீர் சேகரிக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் என கலெக்டர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டார்.

    தற்போது பருவமழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் தொற்று நோய்களான டெங்கு, சிக்கன்குனியா, லேப்டோஸ்பைரோசிஸ், ஸ்க்ரப்டைப்பஸ் போன்ற தொற்று நோய்கள் உருவாகலாம்.

    நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு வீடு வீடாக சென்று கொசு மருந்து தெளித்தல், தண்ணீரில் உள்ள குளோரின் அளவை ஆய்வு செய்தல், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி ரத்த பரிசோதனைகள் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஏ.டி.எஸ். எனும் கொசு கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரை கடிக்கும் ஏடிஸ் கொசு, ஆரோக்கியமாக உள்ள நபரை கடிப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஏடிஸ் கொசு என்பது சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகிறது.

    தண்ணீரை சேமித்து வைக்கும் சிமெண்ட் தொட்டி, டிரம், குடங்கள், மண்பாண்டங்கள், டயர்கள், தேங்காய் மட்டைகள், உரல், ஆட்டுக்கல், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கீழ்நிலை நீர் தேக்க தொட்டி, குளிர்சாதன பெட்டி, ஏர்கூலர் போன்றவற்றிலிருந்தும் கொசு உற்பத்தியாகும்.

    காய்ச்சல் ஏற்பட்ட நபர்கள் சுயமாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளுக்கு சென்று சிகிச்சை பெறலாம்.

    காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    • 10 கேமராக்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகின்றன
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக வணங்கி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் வருகின்றனர்.

    இதில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்களும் மற்றும் தினந்தோறும் பல ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வெளிநாடு வெளி மாநிலம் வெளி மாவட்டம் உள்ளூர் பக்தர்கள் என கிரிவலம் செல்கின்றனர்.

    கிரிவல பாதையில் அவ்வப்போது பல்வேறு குற்ற செயல்களை நடைபெற்று வருவதை தொடர்ந்து 8 இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 கிலோ மீட்டருக்கு ஒரு ரோந்து போலீசார் போடப்பட்டுள்ளனர்.

    மேலும் 14 கிலோமீட்டர் சுற்றிலும் சுமார் 130 கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. இந்த சிசிடி கேமரா மூலம் பல்வேறு குற்ற செயல்களை அவ்வப்போது கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வந்தனர்.

    இதில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்களை இந்த கேமராக்கள் மூலம் தான் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில மாதங்களாகவே இந்த கேமராக்கள் பராமரிப்பு இன்றி பொருத்தப்பட்ட திசையில் இருந்து மாறியும் பழுதடைந்தும் கிடக்றிது.

    தற்போது வெறும் 10 கேமராக்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கிரிவலப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள இந்த 130 கேமராக்களையும் பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இந்த கேமராக்களை ஏன் பராமரிக்கவில்லை என்பது குறித்து தெரியவில்லை. ேபாலீசார் பராமரிக்கும் பணி அவர்களிடம் இல்லாததால் மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர்.

    இது சம்பந்தமாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    • தாசில்தார்களுக்கு நீர்வளத் துறையினர் கடிதம்

    திருவண்ணாமலை:

    தென்பெண்ணையாறு நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அணைக்கு நேற்று பிற்பகல் பிற்பகல் 2 மணி நிலவரப்படி விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

    இதனால்,119 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 114 அடியை எட்டியது. அணையில் 6200 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.இதனால், பெண்ணையாற்று கரையோரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாசில்தார்களுக்கு நீர்வளத் துறையினர் கடிதம் அனுப்பி உள்ளனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியுள்ளது. 119 அடி உயரத்தில் 5 அடி மட்டும் குறைவாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து ஏற்படும்போது, முழுமையாக திறந்துவிடப்படும்.

    எனவே, சேதம் மற்றும் இழப்பு ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சாத்தனூர் அணை அதிகாரி தெரிவித்துள்ளதாவது:-

    அணைக்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்வரத்து திடீரென அதிகரிக்கும் சூழல் உள்ளது. இதனால், அணை யின் நீர்மட்டம் கிடுகிடுவென 117 அடியை எட்டிவிடும்.

    அப்போது நீர்வரத்து தொடர்ந்தால், 11 கண் மதகுகள் வழியாக, தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும். எனவே, 114 அடியை எட்டியுள்ள நிலையில், கரையோர கிராமங்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ள அபாய எச்சரிக்கை

    தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.

    மேலும், தென்பெண்ணை ஆற்றில் கால்நடைகளை குளிக்க வைக்கவும், மற்றும் துணி களை துவைக்கவும் கூடாது. இதேபோல், ஆற்றை கடந்து செல்லும் முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கும்.

    திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    4 மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

    • பைக் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 28). இ- சேவை மையம் நடத்தி வருகிறார்.

    அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் சரவணன் (30), மற்றொரு சரவணன் (29) உதயகுமார் (33). கூலி தொழிலாளிகள்.

    நேற்று முன்தினம் 3 வாலிபர்களும் பைக்கில் விஜயகுமாரின் கடைக்கு வந்தனர். அப்போது பைக்கை கடையின் முன்பு வெளியே நிறுத்தினர்.

    இதனை கண்ட விஜயகுமாரின் நண்பர் சீனிவாசன் என்பவர் ஏன் கடையின் வெளியே பைக்கை நிறுத்துகிறீர்கள் என்று கேட்டார். அப்போது 3 வாலிபர்களும் சீனிவாசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை பார்த்த விஜயகுமார் ஏன் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என்று கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 3 வாலிபர்கள் விஜயகுமாரை சரமாரியாக தாக்கினர்.

    இதனை தடுக்க வந்த விஜயகுமாரின் தந்தை முனியப்பனை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதில் காயம் அடைந்த விஜயகுமார் மற்றும் முனியப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அனக்காவூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன், உதயகுமார் உள்பட 3 பேரை நேற்று கைது செய்தனர்.

    ×