என் மலர்
திருவண்ணாமலை
- உத்தமராய பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு சாமிக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்து தரிசனம் செய்தனர்.
வாய் பேச இயலாதவர்கள் இக்கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்யும் தேனை உண்டால் பேச்சு வரும் என்பது ஐதீகம். பக்தர்களுக்கு தேன் பிரசாதங்களை சிவா பட்டாச்சாரியார் வழங்கினார்.
மேலும் மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத உத்தமராய பெருமாள் அலங்காரத்தில் கருட வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக புகார்
- வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
செய்யாறு:
செய்யாறு அடுத்த குரும்பூரை சேர்ந்தவர் சம்பத் (வயது 48).டிரைவர். மனைவி தமிழ்ச்செல்வி, இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பத் பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் நெடுங்கல் கூட்ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது.
இதில் சம்பத் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் அனக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நெடுங்கல் கூட்ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- போலீசார் விசாரணை
- ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அத்தி மகுல பள்ளியை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 50). தொழிலாளி.
இவர் நேற்று இரவு தேவலாபுரம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி இவர் ஓடி சென்ற பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு ஜெயவேல் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயவேல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உமராபாத் போலீசார் இருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் ஜெயவேல் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் தகவல்
- பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்லூரி மாணவர்கள் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆயிரத்து 330 குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.
இதில் கலந்துகொள்ள உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அக்டோபர் 30-ந் தேதிக்குள் திரும்ப அளிக்க வேண்டும்.
மேலும் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் அருகே மயங்கி கிடந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த ஆதனூரை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 68). இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. மனைவி பானுமதி. இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் உலகநாதன் தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலத்திற்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது பக்கத்து நிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் உலகநாதன் தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் அருகே மயங்கி கிடப்பதாக கூறினர்.
பின்னர் அவரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உலகநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உலகநாதனின் மகன் பூபாலன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உலகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எண்ணும் பணி வீடியோ பதிவு செய்யப்பட்டன
- 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளி இருந்து
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் பக்தர்கள் ஒரு கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ரூபாயை காணிக்கையாக அளித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் 14 கிலோமீட்டர் தூரமுள்ள அண்ணாமலையைச் சுற்றி உள்ள கோவில்களில் வைக்கப்பட்டுள்ள காணிக்கை உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன.
கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை உண்டியல்கள் எண்ணும் பணி நடந்தது.
இதில் ரூ.1 கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ரூபாய் பணம், 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளி ஆகியவற்றை பொதுமக்கள் காணிக்கையாக அளித்திருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.
- ஆசை வார்த்தை கூறி உல்லாசம்
- போலீசார் விசாரணை
போளூர்:
சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது இளம் பெண். அதே பகுதி சேர்ந்த வாலிபரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த வாலிபர் இளம் பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இதனால் அப்பெண் கர்ப்பிணியானர். இதனால் அந்த வாலிபரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். வாலிபர் இதற்கு மறுத்தார்.
பின்னர் ஏதோ சில மாத்திரைகளை கொடுத்து பெண்ணின் கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் இளம் பெண் வாலிபரிடம் தன்னை திருமணம் செய்யக்கோரி வலியுறுத்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர் இது குறித்து போளூர் அனைத்து மகளிர் போலீசில் இளம் பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன் விரோதம் காரணமாக தகராறு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அடுத்த நம்மண்டியை சேர்ந்தவர் அசோகன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் நேற்று அரிஹரபாக்கத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அதே பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகளான சக்கரபாண்டி, சுரேஷ் ஆகியோர் அந்த ஓட்டலுக்கு வந்தனர். அப்போது முன் விரோதம் காரணமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த அசோகனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரம் அடைந்த சக்கரபாண்டி அருகே இருந்த பீர் பாட்டிலாலும், சுரேஷ் கல்லாலும் அசோகன் தலையில் தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
அருகே இருந்தவர்கள் அசோகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அசோகன் மனைவி மைதிலி தூசி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அண்ணன்- தம்பிகளை தேடி வருகின்றனர்.
- பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு
- வாலிபர் கைது
ஆரணி:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (46), விவசாயி.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம், நரியம்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.
சேத்துப்பட்டு-செஞ்சி சாலையில் உள்ள ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 33). இவர்கள் இருவரும் நண்பர்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் செஞ்சி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பணம் கொடுக்கல்-வாங்கலில் குமார், கமலக்கண்ணன் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணன் அங்குள்ள ஒரு கட்டிடம் கட்டும் இடத்தின் அரு கில் கிடந்த மண்வெட்டியை எடுத்து வந்து, குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
பலத்த காயம் அடைந்த குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந் தார். அவரை அங்கிருந்தவர் கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சி கிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட் டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து கமலக் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொடுக்கல்- வாங்கல் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தலையில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
பெரணமல்லூர் அடுத்த நகரந்தலை சேர்ந்தவர் தொப்பளான் (வயது 23). விவசாயி.
இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் நகரந்தலில் இருந்து சேத்துப்பட்டுக்கு தனது பைக்கில் சென்றார். கடையில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த பைக் இவர் ஓட்டி வந்த பைக் மீது திடீரென மோதியது. இதில் தொப்பளான் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தொப்பளான் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மகன் ராமலிங்கம் சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொப்பளான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற பைக்கை தேடி வருகின்றனர்.
- அதே இடத்தில் மீண்டும் நிறுவ வலியுறுத்தல்
- திருவண்ணாமலையில் 25 ஆண்டுகளாக இருந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நகரில் திருவள்ளுவர் சிலை கடந்த 1998-ம் ஆண்ட அமைக்கப்பட்டது. திருவண் ணாமலை - திருக்கோவிலூர் சாலை சந்திப்பில் கேப்டன் சாமிநாதன் என்பவர் திருவள்ளுவர் சிலையை நிறுவினார்.
அப்போதைய வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலைக்கு தை மாதம் 2-ம் நாளன்று அரசியல் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், திருவள்ளுவர் சிலை கடந்த 19-ந் தேதி இரவு அகற்றப்ப ட்டது. திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டதும், 'பொக்லைன்' இயந்திரம் மூலம்பீடம் இடிக்கப்பட்டது. நகராட்சி சார்பில் சிலை அகற்றப்பட்டு பாது காப்பாக வைக்கப்ப ட்டுள்ளதாக கூறப்படு கிறது.
விரிவாக்கப் பணிக்காக சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பணி நிறைவு பெற்றதும், அதே இடத்தில் மீண்டும் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும். என கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவள்ளு வர். பற்றாளர்கள் கூறும்போது,
"திருவண்ணாமலை நகரின் அடை யாளமாக கடந்த 25 ஆண்டுகளாக திருவள்ளுவர் சிலை இருந்தது. திருவள்ளுவர் தின விழாவில் அனைத்து அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சிலை அகற்றப்பட்டு ள்ளதாக கூறுகின் றனர்.
சிலையை அகற்று வதாகவும், மீண்டும் வருவாய்த் நிறுவப்படும் என நகராட்சிதுறை நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை தரப்பில் தெரிவிக்க வில்லை. அனைத்து செயல்களையும் மறைமு கமாகவே செய்துள்ளனர்.
அரசியல் கட்சி தலைவர்களின் சிலை அகற்றப்பட்டிருந்தால் கூட்டம் கூடியிருக்கும், எதிர்ப்பு கிளம்பியிருக்கும். திருவள்ளுவருக்கு கூட்டம் கூடவில்லை.
சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கோவி ல்களை இடிப்பதை போல் புலவர் திருவள்ளுவர் சிலையும் இடிக்கப்ப ட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலையை அகற்றியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அகற்ற ப்பட்ட திருவள்ளு வர் சிலையின் நிலை தெரி யவில்லை. திருவள்ளு வர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என பொது ப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலுவும், மாவட்ட கலெக்டர் பா.முரு கேஷும் உறுதி அளிக்க வேண்டும்" என்றனர்.
- 3 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
போளூர்:
போளூர் பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் விஷ்வா (வயது 25).கட்டிட மேஸ்திரி. இவர் தனது நண்பர்களான ஆகாஷ் (20) மற்றும் சஞ்சயுடன் (20) வேலை சம்பந்தமாக பைக்கில் தேவிகாபுரம் சென்றனர்.
வேலைகள் முடிந்து மீண்டும் போளூர் நோக்கி ஒரே பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
மட்டபிரையூர் அருகே வரும் போது எதிரே வந்த டிராக்டரும் -பைக்கும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.
இதில் விஷ்வா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக விஷ்வா, ஆகாஷ் ஆகியோரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்வா பரிதாபமாக நேற்று முன்தினம் இறந்தார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் என்பவர் நேற்று மாலை சிகிச்சையில் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
போளூர் போலீசார் ஆகாஷ் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






