விவசாயி மர்ம சாவு

தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் அருகே மயங்கி கிடந்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
விவசாயி மர்ம சாவு
Published on

ஆரணி:

ஆரணி அடுத்த ஆதனூரை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 68). இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. மனைவி பானுமதி. இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் உலகநாதன் தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலத்திற்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது பக்கத்து நிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் உலகநாதன் தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் அருகே மயங்கி கிடப்பதாக கூறினர்.

பின்னர் அவரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உலகநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உலகநாதனின் மகன் பூபாலன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உலகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com