கிரிவலப்பாதை கோவில்களில் ரூ.1.94 கோடி உண்டியல் காணிக்கை

எண்ணும் பணி வீடியோ பதிவு செய்யப்பட்டன 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளி இருந்து
கிரிவலப்பாதை கோவில்களில் ரூ.1.94 கோடி உண்டியல் காணிக்கை
Published on

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் பக்தர்கள் ஒரு கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ரூபாயை காணிக்கையாக அளித்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் 14 கிலோமீட்டர் தூரமுள்ள அண்ணாமலையைச் சுற்றி உள்ள கோவில்களில் வைக்கப்பட்டுள்ள காணிக்கை உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன.

கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை உண்டியல்கள் எண்ணும் பணி நடந்தது.

இதில் ரூ.1 கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ரூபாய் பணம், 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளி ஆகியவற்றை பொதுமக்கள் காணிக்கையாக அளித்திருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com