மண்வெட்டியால் தாக்கி விவசாயி கொலை

பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு வாலிபர் கைது
மண்வெட்டியால் தாக்கி விவசாயி கொலை
Published on

ஆரணி:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (46), விவசாயி.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம், நரியம்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.

சேத்துப்பட்டு-செஞ்சி சாலையில் உள்ள ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 33). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் செஞ்சி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பணம் கொடுக்கல்-வாங்கலில் குமார், கமலக்கண்ணன் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணன் அங்குள்ள ஒரு கட்டிடம் கட்டும் இடத்தின் அரு கில் கிடந்த மண்வெட்டியை எடுத்து வந்து, குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

பலத்த காயம் அடைந்த குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந் தார். அவரை அங்கிருந்தவர் கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சி கிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட் டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து கமலக் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொடுக்கல்- வாங்கல் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com