என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன் கோனாரின் ராயன் குளக்கரை ஒட்டி உள்ள கிடங்கு தெரு பகு தியை சேர்ந்தவர் முத்து (வயது 25.

    இவர் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள புளிரம்பாக் கம் ஏரியில் நண்பருடன் மீன் பிடிக்க சென்றார். அப்போது ஏரி நீரில் இறங்கினார். சிறிது தூரம் சென்ற அவர் கால் தவறி சேற்றில் சிக்கி மூழ்கினார். இதுகுறித்து அவரது நண்பர் செய்யாறு தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். சேற்றில் சிக்கிய முத்துவை சுமார் 2 மணி நேரமாக தேடினர்.

    இருள் சூழ்ந்ததாலும் போதியம் வெளிச்சம் இல்லாததாலும் தேடும் பணி கைவிடப்பட்டது.

    மீண்டும் இன்று காலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சிறிது நேர தேடலுக்குப் பிறகு முத்துவை பிணமாக மீட்டனர்.

    இது குறித்து செய்யாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துவின் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும்
    • சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது சிறுவர்களை அதிகம் தாக்கியுள்ளது.

    இதனால், செங்கம் மருத்துவமனை மற்றும் உள்ள சிறுவர்களின் ரத்த மாதிரி அனுப்பப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

    3 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு செங்கம் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சால் பாதிக்கப்ப ட்டவர்கள் அதிகரித்துள்ளது.

    காய்ச்சலின் வருவது தன்மை தீவிரமாக உள்ளதால் பெற்றோர் அச்சமடை ந்துள்ளனர். தொடர்ந்து, மழை பெய்து வருவதால் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளன. மேலும், கழிவுநீர் கால்வாய்களும் பல இடங்களில் தூர்ந்து கிடப்பதால், மழைநீருடன் கழிவு நீரும் சாலையில் தேங்கி விடுகிறது.

    இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலும் அதிகரித்த வண்ணம் உள்ள தால், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • சீரமைப்பு பணிகள் நடைபெற்றது
    • புனித நீர் அபிஷேகத்துடன் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் உள்ள சிவசக்தி வள்ளி முத்து மாரியம்மன் கோவிலில் நன்கொடையாளர் மூலம் ரூ.4 லட்சம் மதிப்பில் தரைக்கு டைல்ஸ், கேட் ஆகிய சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

    இதையடுத்து நேற்று காலை கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதில் கோவில் விழாக்குழு தலைவர் கே.டி. குமார், ஓய்வு கண்டக்டர் சேகர், ஏழுமலை, பேருராட்சி வார்டு உறுப்பினர்கள் மணி விஜய் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அம்மனுக்கு புனித நீர் அபிஷேகத்துடன் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.2 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர தெருவில் அமைந்துள்ள பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடந்தது.

    விழாவிற்கு கைத்தறி துறை உதவி இயக்குநர் மணிமுத்து முன்னிலை வகித்தார். வேலூர் மண்டல மேலாளர் நாகராஜன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலெக்டர் பா.முருகேஷ் குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.

    கோ ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது. 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டில் சுமார் 174.10 கோடிக்கு விற்பனை இலக்கை எட்டியுள்ளது.

    தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ட்வில் வீவ் ஆயத்த ஆடைகள், காம்பிரே ஆயத்த ஆடைகள், ஸ்லவ் காட்டன் சட்டைகள், டிசைனர் காட்டன் சேலைகள், டிசைனர் கலெக்சன் போர்வைகள், காம்பிரே போர்வைகள் ஆகியவை புதிய வரவுகளாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு 91 லட்ச ரூபாய் விற்பனை செய்த பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு ரூ.2 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    56 சதவீதம் கூடுதல் பலன் கிடைப்பதால் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    அரசு ஊழியர்கள் 30 சதவிகித தள்ளுபடியில் வட்டியில்லா கடன் வசதியை பெற்று பயன்பெறலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக அனைத்து விடுமுறை நாட்களிலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் செயல்படும் என கைத்தறி துறை உதவி இயக்குநர் மணிமுத்து தெரிவித்தார்.

    இதில் விற்பனை மேலாளர் தணிகைவேலு, குமரவேல், நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
    • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

    அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 6.46 மணிக்கு தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

    மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • செய்யாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது
    • கலசபாக்கத்தில் 75.40 மி.மீ மழை பதிவாகியது

    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், கண்ணமங்கலம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. செங்கம் மற்றும் அதன் அருகே உள்ள ஜமுனாமரத்தூர் மலை மற்றும் அடிவாரப் பகுதிகள் உள்பட செங்கம் சுற்று வட்ட பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளிலும் நேற்று இரவு கன மழை பெய்தது.

    இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக செங்கம் - ஜவ்வாதுமலை தொடரில் உருவாகி செங்கத்தை ஒட்டி செல்லும் செய்யாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    இதில் திருவண்ணாமலையில் 96 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் செங்கத்தில் 38.20, போரூரில் 18.80, ஜமுனாமரத்தூரில் 20, கலசபாக்கத்தில் 75.40, தண்டராம்பட்டில் 15.60, ஆரணியில் 18.60, செய்யாறில் 35, வந்தவாசியில் 32, கீழ்பெண்ணாத்தூரில் 33.20, வெம்பாக்கத்தில் 35, சேத்துப்பட்டு 72.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • சிகிச்சை பலனின்றி இறந்தார்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திருவூடல் தெருவைச் சேர்ந்த முரளி மகன் நவீன் (வயது 26) போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வந்தார்.

    இவர் நேற்று இரவு சுமார் 11.15 மணி அளவில் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் அய்யம்பாளையத்திற்கு சென்றுவிட்டு பைபாஸ் சாலை வழியாக திருவண்ணாமலைக்கு வந்தார்.

    நல்லவன் பாளையம் பைபாஸ் சாலை சந்திப்பு அருகில் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதினார்.

    இதில் படுகாயம் அடைந்த நவீனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நவீன் இறந்தார்.

    திருவண்ணாமை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நண்பர்களை சந்திக்க சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கலவை:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பெரியவேலி யநல்லூர் கிராமம் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.

    இவருடைய மகன் அஜித்(வயது 20). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் ஆரணி அருகே உள்ள மாமண்டூர் கிராமத்திற்கு தனது நண்பர்களை சந்திக்க பைக்கில் சென்றார்.

    பின்னர் ஆரணி-செய்யாறு நெடுஞ்சாலையில் கலவையை அடுத்துள்ள மாம்பாக்கம் அருகே பைக்கில் வந்தார்.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் திடீரென சாலையோரமாக இருந்த மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த வாழைப்பந்தல் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், பூஜா, எஸ்.பி தனிப்படை ரகுராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ரேணுகா வீடு திரும்பவில்லை.
    • ரேணுகாவை யோகேஸ்வரன் கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளார்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சென்னாவரம் பாரதியார் நகரை சேர்ந்தவர் மாரி. இவருடைய மகள் ரேணுகா (வயது 14). வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் நீலமேகம் என்பவரது மகன் யோகேஸ்வரன் ( 21). மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரேணுகா யோகேஸ்வரன் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ரேணுகா வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து வந்தவாசி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

    செல்போன் மூலம் துப்பு துலக்கியதில் கடைசியாக ரேணுகா யோகேஸ்வரனிடம் பேசியது தெரியவந்தது. இதை தொடர்ந்து நேற்று இரவு யோகேஸ்வரனை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ரேணுகாவை கொலை செய்து விட்டதாக யோகேஷ்வரன் திடுக்கிடும் தகவல் அளித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் யோகேஸ்வரனை அழைத்து கொண்டு சென்னாவரம் கிராமத்திற்கு வந்தனர்.

    அங்குள்ள முள் புதரில் ரேணுகா பிணமாக கிடந்தார். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து யோகேஸ்வரனை கைது செய்தனர்.

    ரேணுகாவை யோகேஸ்வரன் கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனிமையில் சென்ற மாணவியை யோகேஸ்வரன் மடக்கி பேசினார். அப்போது ஏற்பட்ட தகராறில் யோகேஸ்வரன் ரேணுகாவை தாக்கியுள்ளார் .மேலும் அவரது சுடிதார் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு ஒன்றியம் ,காழியூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு உதவி இயக்குனர் சதீஷ்குமார் தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

    முகாமில் 1,050 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

    பின்னர் அதே கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நாடக மேடையை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல் ,தினகரன், சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன் ,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அசோக் ,தொண்டரணி அமைப்பாளர் ராம்ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தகவல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது.

    அவர் பேசியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் ஆராய்ச்சி மையம் மற்றும் கால்நடை கல்லூரி அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    1,133 செயல்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து மழைநீர் சேகரிக்கும் தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை பெற்று சிறு குட்டைகள், தடுப்பணைகள், பண்ணை குட்டைகள் அமைத்திட வேண்டும். இதன் மூலம் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு பயன் அளிக்கும்.

    விவசாயிகளுக்கு தேவையான இ-அடங்கல் சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் உடனடியாக வழங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் புல் வெட்டும் கருவிகள் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வேளாண் உபகரணங்கள் வழங்க வேண்டும்.

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவில் பயிர் கடன்களை வழங்க வேண்டும் இவ்வாறு அவர் பேரினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சோமசுந்தரம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன், முன்னோடி வங்கி மேலாளர் கௌரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த புத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 55).

    இவர்களது வீட்டு முன்பு செங்கற்களை அடுக்கி வைத்துள்ளனர். அதனை பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுகுணா என்பவர் செங்கற்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த கன்னியம்மாள் ஏன் செங்கற்களை எடுக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டார்.

    இதனைக் கண்ட சுகுணாவின் மகன் ராஜபாண்டியன் (36) என்பவர் கன்னியாம்மாளிடம் தகராறு செய்து திட்டியதாக தெரிகிறது.

    இது குறித்து கன்னியம்மாள் மகன் சரவணனிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சரவணன் ஏன் என் அம்மாவிடம் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என்று சுகுணாவிடமும், ராஜபாண்டியிடமும் கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ராஜபாண்டி, அவரது தம்பி சதாசிவம் மற்றும் செய்யாறை சேர்ந்த 2 பேர் கன்னியம்மாளையும், சரவணனையும் சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    பின்னர் கண்ணியம்மாளின் இளையமகன் ஜெயவேலு பிரம்மதேசம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நேற்று சதாசிவத்தை கைது செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    ×