என் மலர்
திருவண்ணாமலை
- பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளது
- கனமழையின் காரணமாக ஏரி, குளம், குட்டைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து, தண்ணீர் கொட்டுகிறது. இந்த தண்ணீர், நந்தி வாயில் இருந்து கொட்டுவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மலையில் உள்ள நந்தி தீர்த்தத்தில் தண்ணீர் கொட்டும் காட்சி பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளது.
ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் பல அருவிகள் காணப்படும் நிலையில், நந்தி வாயிலிருந்து தண்ணீர் ஊற்றுவதை காண உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
- ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து துணிகரம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு மேல் நகர்மேடுவை சேர்ந்தவர் திருமலை (வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
திருமலை ஆன்லைன் மூலம் செல்போனை ஒன்றை ஆர்டர் செய்தார். அந்த செல்போனை சேத்துப்பட்டு பெரிய கொழப்பலூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (21).
என்பவர் கொரியர் மூலம் திருமலை முகவரிக்கு எடுத்து வந்தார். அப்போது திருமலையை தொடர்பு கொண்டபோது தான் அங்கு இல்லை தீப்பந்தல் கூட்ரோடு அருகே வருமாறு கார்த்தியிடம் கூறினார். அந்த பார்சலை எடுத்துக் கொண்டு தீப்பந்தல் கூட்ரோட்டிற்கு சென்றார். அங்கு நின்றிருந்த திருமலையிடம் செல்போன் பார்சலை கொடுத்து பணத்தை கேட்டார்.
அந்த செல்போனை வாங்கிக் கொண்டு பணத்தை கொடுக்காமல் திடீரென பைக்கை எடுத்துக்கொண்டு திருமலை அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
செய்வதறியாமல் நின்ற கார்த்தி திருமலை முகவரிக்கு சென்று பார்த்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது திருமலை கொடுத்த முகவரி போலியானதும் தான் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து கார்த்திக் செய்யாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான திருமலையை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் திருமலையை கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் இது குறித்து திருமலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குளிக்க சென்றபோது பரிதாபம்
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்
சேத்துப்பட்டு:
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஈருடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனிஷ்லாஸ் (வயது 60). திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த செய்யானந்தல் மதுரா கர்ணாம்பாடி ஏரியில் ஒருவர் மீன் பிடிப்பதற்காக குத்தகை எடுத்துள்ளார்.
அதில் தனிஷ்லாஸ் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று குளிப்பதற்காக அவர் ஏரியில் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி கொண்டு நீரில் மூழ்கினார்.
இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து சேத்துப்பட்டு தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும், போலீசாரும் ஏரியில் படகு மூலமும், தண்ணீரில் இறங்கியும் தனிஷ்லாசை தேடினர்.
இரவு 8 மணி வரையும் தேடியும் அவர் கிடை க்கவில்லை . இதனால் தேடும் பணி கைவிடப்பட்டது. இன்று காலை தீயணைப்புத் துறையினர் தனிஷ்லாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர தேடலுக்கு பின்பு அவரை பிணமாக மீட்டனர்.
போலீசார் தனிஷ்லாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- உடல்நல பாதிக்கப்பட்டதால் விரக்தி
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வழுதலங்குணம் கிராமத் தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 34). இவர் கணவருடன் வாழாமல் சந்தோஷ் (5) என்ற மகனுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் லட்சுமி அடிக்கடி உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து (விஷம்) குடித்துள்ளார்.
இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச் சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உடல்நல பாதிக்கப்பட்டதால் விரக்தி
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வழுதலங்குணம் கிராமத் தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 34). இவர் கணவருடன் வாழாமல் சந்தோஷ் (5) என்ற மகனுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் லட்சுமி அடிக்கடி உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து (விஷம்) குடித்துள்ளார்.
இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச் சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கிராமத்தின் வரைபடத்தை தத்ரூபமாக வரைந்து காட்டினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேளாண் மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி பெற்றனர்.
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேளாண் துறை மாணவிகள் ச.சந்திர ரூபினி, வெ.சாருமதி, நி.ரேச்சல், ஜெ.லட்சுமி சுப்ரியா ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம் பவித்திரம் கிராமத்தில் கிராம மக்களுடன் இணைந்து 3 மாத கால கிராமப்புற வேளாண் பயிற்சி பெற்றனர்.
மாணவிகள் முக்கிய விவசாய பயிற்களின் விதைப்பு முறை, விவசாய மக்களின் தினசரி வாழ்க்கை முறை, கிராமத்தின் வரைபடம் உள்ளிட்டவைகளை தரையில் தத்ரூபமாக வரைந்து காட்டினர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வேளாண் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
- ஆந்திரா மற்றும் சென்னை, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமியொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) மாலை 6.46 மணிக்கு தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் சென்னை, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமியொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வேலூர் கோட்டத்தில் 130 பஸ்கள் இயக்கப்பட்டது.
திருப்பத்தூரில் 30 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 20 பஸ்களும் இயக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூரில் இருந்து 140 பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேபோல பவுர்ணமியொட்டி கலசப்பாக்கம் அடுத்துள்ள பருவதமலையில் இன்று காலை முதலே பக்தர்கள் மலை மீது ஏரி தரிசனம் செய்தனர். குடும்பத்துடன் கிரிவலம் சென்றனர்.
- நிலத்தில் மாடு ஓட்டி வந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சின்னப்பன் (வயது 86), முன்னாள் ராணுவ வீரர்.
இவருக்கு சொந்தமான நிலத்தில் அதே ஊரில் வசிக்கும் விவசாயியான பரசுராமன் என்பவர் மாடுகள் ஓட்டி வந்தார்.
இதனை தட்டிக்கேட்ட சின்னப்பனை பரசுராமன் ஆபாசமாக திட்டி எட்டி உதைத்தும், கொம்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சின்னப்பன் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.
இதுகுறித்து சின்னப்பனின் மகன் தஞ்சான் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து, பரசுராமனை கைது செய்தார். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.2.17 லட்சம் வசூல்
- 217 கிராம் தங்கம், வெள்ளி 317 கிராமும் செலுத்தியிருந்தனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்ஷன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் சிவலிங்கம், கண்காணிப்பாளர் ஆறுமுகம், செயல் அலுவலர் சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் கோயில் மேலாளர் மகாதேவன், எழுத்தர் சீனிவாசன், படவேடு இந்தியன் வங்கி உதவி மேலாளர் ராஜா, உள்பட 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு உண்டியல் எண்ணும் பணியை செய்தனர்.
இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.2,17,604-ம், 217கிராம் தங்கம், வெள்ளி 317 கிராமும் செலுத்தியிருந்தனர்.
- பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
- இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 6 பிரகாரங்கள் மற்றும் 9 பெரிய கோபுரங்கள் உள்ளன.
இக்கோவில் பல்லவர்கள் சோழர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அம்மணி அம்மன் கோபுரத்தில் இருந்த சதாசிவர் சிலையின் ஒரு பகுதி நேற்று காலை உடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோபுரத்தில் இருந்து உடைந்து விழுந்த சிலை அறநிலையத்துறை பொறியாளர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டு விரைவில் சீரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
- விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
- ஏராமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் பாலகுமார், மேற்கு ஆரணி வட்டார கல்வி அலுவலர் அருணகிரி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பள்ளி வளாகத்தில் மூலிகைத்தோட்டம், பல்வகைத் தோட்டங்களை கண்டு பாராட்டினர். முன்னதாக தலைமையாசிரியைதாமரைச்செல்வி வரவேற்றார்.
அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர் க.பிரபாகரன், தற்காலிக ஆசிரியர்கள் சசிகலா, நளினி, மகேஷ்வரி, வனிதா, ஆசிரியைகள் பவானி, தமிழ்ச்செல்வி மாணவ, மாணவிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை கிராமம், வேடியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது50). இவர் நேற்று இரவு திருவண்ணா மலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாலியப்பட்டு கூட்ரோடு சாலையை கடக்க முயன்றார்.
அப்போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் ரத்தினம் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தினம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






