ராமசாணிக்குப்பம் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது

விழிப்புணர்வு ஏற்படுத்தினர் ஏராமானோர் கலந்து கொண்டனர்
ராமசாணிக்குப்பம் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் பாலகுமார், மேற்கு ஆரணி வட்டார கல்வி அலுவலர் அருணகிரி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளி வளாகத்தில் மூலிகைத்தோட்டம், பல்வகைத் தோட்டங்களை கண்டு பாராட்டினர். முன்னதாக தலைமையாசிரியைதாமரைச்செல்வி வரவேற்றார்.

அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர் க.பிரபாகரன், தற்காலிக ஆசிரியர்கள் சசிகலா, நளினி, மகேஷ்வரி, வனிதா, ஆசிரியைகள் பவானி, தமிழ்ச்செல்வி மாணவ, மாணவிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com