முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய விவசாயி கைது

நிலத்தில் மாடு ஓட்டி வந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் போலீசார் விசாரணை
முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய விவசாயி கைது
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சின்னப்பன் (வயது 86), முன்னாள் ராணுவ வீரர்.

இவருக்கு சொந்தமான நிலத்தில் அதே ஊரில் வசிக்கும் விவசாயியான பரசுராமன் என்பவர் மாடுகள் ஓட்டி வந்தார்.

இதனை தட்டிக்கேட்ட சின்னப்பனை பரசுராமன் ஆபாசமாக திட்டி எட்டி உதைத்தும், கொம்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சின்னப்பன் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.

இதுகுறித்து சின்னப்பனின் மகன் தஞ்சான் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து, பரசுராமனை கைது செய்தார். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com