search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் ஆராய்ச்சி மையம், கால்நடை கல்லூரி அமைக்க இடம் தேர்வு
    X

    கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசிய காட்சி

    வேளாண் ஆராய்ச்சி மையம், கால்நடை கல்லூரி அமைக்க இடம் தேர்வு

    • கலெக்டர் தகவல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது.

    அவர் பேசியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் ஆராய்ச்சி மையம் மற்றும் கால்நடை கல்லூரி அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    1,133 செயல்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து மழைநீர் சேகரிக்கும் தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை பெற்று சிறு குட்டைகள், தடுப்பணைகள், பண்ணை குட்டைகள் அமைத்திட வேண்டும். இதன் மூலம் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு பயன் அளிக்கும்.

    விவசாயிகளுக்கு தேவையான இ-அடங்கல் சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் உடனடியாக வழங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் புல் வெட்டும் கருவிகள் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வேளாண் உபகரணங்கள் வழங்க வேண்டும்.

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவில் பயிர் கடன்களை வழங்க வேண்டும் இவ்வாறு அவர் பேரினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சோமசுந்தரம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன், முன்னோடி வங்கி மேலாளர் கௌரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×