என் மலர்
உள்ளூர் செய்திகள்

பீர் பாட்டில், கல்லால் தாக்கியதில் தொழிலாளி படுகாயம்
- முன் விரோதம் காரணமாக தகராறு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அடுத்த நம்மண்டியை சேர்ந்தவர் அசோகன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் நேற்று அரிஹரபாக்கத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அதே பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகளான சக்கரபாண்டி, சுரேஷ் ஆகியோர் அந்த ஓட்டலுக்கு வந்தனர். அப்போது முன் விரோதம் காரணமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த அசோகனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரம் அடைந்த சக்கரபாண்டி அருகே இருந்த பீர் பாட்டிலாலும், சுரேஷ் கல்லாலும் அசோகன் தலையில் தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
அருகே இருந்தவர்கள் அசோகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அசோகன் மனைவி மைதிலி தூசி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அண்ணன்- தம்பிகளை தேடி வருகின்றனர்.






