என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா இனம்காரியந்தல் கிராமம் மேல்நகரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 24). இவர், நேற்று அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. திடீரென அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயற்சி செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து கருணாகரனை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை தீபத் திருவிழா முடிந்த போதிலும் கடந்த 10 நாட்களாக தீப மலை உச்சியில் மகாதீபம் தொடர்ந்து காட்சி தருகிறது. இன்று இரவுடன் மகா தீபம் காட்சி நிறைவு பெறுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் .
இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 29-ந் தேதி தீப மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருவதால் கார்த்திகை தீபத்தன்று வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர தடைவிதிக்கப்பட்டது. சிறப்பு பஸ்களும் இயக்கப்படவில்லை.
மேலும் அன்று கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தீபத் திருவிழா முடிந்த போதிலும் கடந்த 10 நாட்களாக தீப மலை உச்சியில் மகாதீபம் தொடர்ந்து காட்சி தருகிறது. இன்று இரவுடன் மகா தீபம் காட்சி நிறைவு பெறுகிறது.
இதுபற்றி அறிந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கடந்த சில நாட்களாக வருகை தந்து மகா தீபத்தை தரிசித்துச் செல்கின்றனர்.
இதனால் கடந்த 10 நாட்களாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெளியூர் பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. நேற்றும் ஏராளமான பக்தர்கள் மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.
11-வது நாளான இன்று இரவுடன் மகாதீபம் தரிசனம் நிறைவடைகிறது.
நாளை வியாழக்கிழமை காலை மலையில் இருந்து மகா தீப கொப்பரை அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
வாணாபுரம் பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் உளுந்து பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
வாணாபுரம்:
வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான மழுவம்பட்டு, பெருந்துறை பட்டு, குங்கிலிய நத்தம், பேராயம்பட்டு, சின்ன கல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, சு.வாழாவெட்டி, கல்லேரி, சதாகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் கரும்பு, நெல், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பெரும்பாலும் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உளுந்து பயிரிடப்பட்டு அதனை பராமரித்து வருகின்றனர். பெரும்பாலும் மாற்றுப் பயிராக உளுந்து பயிரை அதிகளவில் பயிரிடப்பட்டு வரும் நிலையில் தற்போது உளுந்து பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கீழ்பென்னாத்தூர் அருகே வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பம் பெரிய தெருவை சேர்ந்தவர் முனுசாமி. அவரது மகன் அய்யப்பன் (வயது 32). இவர் சம்பவத்தன்று வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கண்களில் துணியை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் மாணவியின் சாதனையை, கலெக்டர் சந்தீப்நந்தூரி பாராட்டி, சைக்கிள் பரிசு வழங்கினார்.
திருவண்ணாமலை:
செய்யாறு தாலுகா முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரன். பட்டு நெசவாளி. இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் சுருதி (வயது 12). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி சுருதி கண்களில் துணியை கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டும் திறமை கொண்டவர்.
மேலும் அவர் கண்களை மூடிய படியே கையில் வைத்திருக்கும் ரூபாய் தாளின் மதிப்பு, மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் எழுதப்பட்ட வாக்கியம், எண் ஆகியவற்றை தெளிவாக கூறும் திறமையும் கொண்டவர்.
அத்துடன் நாம் எழுதும் சொல்லை அப்படியே எழுதி காண்பிக்கிறார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துணியால் கண்களை கட்டிக் கொண்டு முனுகப்பட்டில் இருந்து வந்தவாசிக்கு 36 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று சாதனை படைத்து உள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். இவருடைய அடுத்த முயற்சியாக திருவண்ணாமலையில் இருந்து ஆரணிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் கண்களை மூடியபடி சைக்கிளில் செல்ல பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு தேவையான ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்க வசதியில்லாததால் சிறுமி சுருதியின் பெற்றோர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்திப்நந்தூரியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இதையடுத்து நேற்று காலை அச்சிறுமியை கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து கலெக்டர் சந்திப்நந்தூரி, சிறுமி சுருதியை பாராட்டி, ஸ்போர்ட்ஸ் சைக்கிளை பரிசாக வழங்கி ஊக்குவித்தார்.
கல்லேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவள நிலை வகுப்பறைகளை அசுத்தம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
வாணாபுரம்:
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கல்லேரி ஊராட்சி. இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்ட்டிருப்பதால் இங்கு மாணவர்கள் வருவது இல்லை.
ஆனாலும் பள்ளி திறந்த நிலையிலேயே உள்ளது. இங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அவர்கள் பள்ளியின் வகுப்பறையில் சமைத்து சாப்பிட்டுவிட்டு, கழிவுகளை அங்கேயே கொட்டி வருகின்றனர். மேலும் அசுத்தம் செய்தும் வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் மர்மநபர்கள் இரவு நேரங்களில் இங்கு தங்கி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் வகுப்பறை எப்போதும் திறந்த நிலையில் இருப்பதால் இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.
பள்ளியின் வகுப்பறை கதவுகள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பள்ளியை பூட்டி பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
பெரணமல்லூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
பெரணமல்லூர் அருகே உள்ள நாவல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மனைவி சிந்தாமணி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சிந்தாமணி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பின்னர் மகா தீபத்தன்று கிரிவலம் செல்ல முடியாததால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கடந்த 29-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கும், கிரிவலத்திற்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது.
தீபத்திருவிழா முடிந்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசயைில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மகா தீபத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாததால் ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் கிரிவலம் சென்றனர்.
தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மலை உச்சிக்கு சென்று மகாதீபத்தை தரிசனம் செய்த நடிகை மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 29-ந்தேதி 2.668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டது. இந்த மகா தீபம் வருகிற 9-ந்தேதி வரை காட்சி அளிக்கும். மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மகா தீபத்தை பக்தர்கள் மலையேறி சென்று பார்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையில் முக்கிய வழிதடங்களில் வனத்துறையினர் மற்றும் போலீசார் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மலை உச்சியில் ஏற்றப்பட்டு உள்ள மகா தீபத்தை, சூது கவ்வும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறி சென்று தரிசனம் செய்து உள்ளார். அங்கு அவர் மகா தீபத்தை அருகில் நின்று தரிசிப்பதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர், திருவண்ணாமலை மலையேறியது உண்மையிலேயே அதிசயம். மலையின் உச்சியை அடைய 1 மணி 40 நிமிடங்களானது. ஆங்காங்கே ஓய்வெடுத்து கீழே இறங்க 2 மணி நேரம் 30 நிமிடங்களானது என்று பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் அவர் மகா தீபம் தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பக்தர்கள் மலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்தது குறித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கரிடம் கேட்டபோது, மகா தீபத்தை காண பக்தர்கள் மலை ஏறி செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நடிகை சஞ்சிதா ஷெட்டியை யார் மலைக்கு அழைத்து சென்றார்கள் என்பது தெரியவில்லை. உள்ளூரை சேர்ந்த வழிகாட்டி (கைடு) மூலமாக தான் அவர் மலைக்கு சென்று இருப்பார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வந்தவாசியில் தனியார் கல்லூரி டிரைவர் வீட்டில் 30 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
வந்தவாசி:
வந்தவாசி, பெரிய காலனி, பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் ரவிச்சந்திரன். தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் சென்னையில் வசிக்கும் மருமகள் வீட்டிற்கு 5 நாட்களுக்கு முன்பு சென்று இருக்கிறார். இந்தநிலையில், வீீீடு திறந்து இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் உத்தரவின்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையிலில் இருந்து வந்த ரவிச்சந்திரன், அவருடைய மனைவி சாரதாவிடம் விசாரித்தபோது, வீட்டின் பூட்டை திறந்து பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் இரண்டு வெள்ளி கொலுசுகள் திருட்டு போயிருப்பதாக தெரிவித்தனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கைரேகை நிபுணர் விஜயகுமார் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தார். மோப்ப நாய் ‘மியாவ்’ வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.

நில விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய கிராம வருவாய் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி மண்டலம் பசினிகொண்டா பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா, விவசாயி. இவருடைய மனைவி துளசி. இவருக்கு 2007-ம் ஆண்டு அரசு 2 ஏக்கர் நிலத்துக்கான பட்டா வழங்கியது. அரசு வழங்கிய நிலத்துக்கான விவரங்களை ராமகிருஷ்ணா ஆன்லைனில் பதிவு செய்ய, அந்தக் கிராம வருவாய் அதிகாரியை நாடினார். கடந்த பிப்ரவரி மாதம் ரைத்து பரோசா என்ற அரசு திட்டத்துக்கு ராமகிருஷ்ணா தகுதி பெற்றதால், அந்த நிலத்தின் விவரங்களை ஆன்லைனில் பதிவிட்டு தனக்கு பட்டா புத்தகம் வழங்க வேண்டும், என மீண்டும் கிராம வருவாய் அதிகாரியிடம் ராமகிருஷ்ணா மனு கொடுத்தார்.
ஆனால் கிராம வருவாய் அதிகாரி பட்டா புத்தகம் வழங்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும், இல்லையெனில் நிலத்தை ஏழைகளுக்கு வீட்டுமனைகளாக வழங்க ஏற்பாடு செய்யப்படும். உனக்கு நிலம் இல்லாமல் போகும், எனக் கிராம வருவாய் அதிகாரி கங்காத்ரி மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கு ராமகிருஷ்ணா, நானே ஒரு ஏழை. என்னால் இவ்வளவு தொகையை தர முடியாது, எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ராமகிருஷ்ணாவுக்கும், கிராம வருவாய் அதிகாரி கங்காத்ரிக்கும் இடையே ஒரு இடைத்தரகர் மூலம் ரூ.5 லட்சம் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ராமகிருஷ்ணா திருப்பதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ.1 லட்சத்தை ராமகிருஷ்ணாவிடம் கொடுத்து, அதை கிராம வருவாய் அதிகாரியிடம் வழங்கும் படி கூறினர்.
அவர், ரூ.1 லட்சத்தை எடுத்துச் சென்று மதனப்பள்ளி அவென்யூ சாலையில் உள்ள கலர் லேப் ஒன்றுக்கு வர வேண்டும், எனப் போனில் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கிராம வருவாய் அதிகாரியிடம், ராமகிருஷ்ணா ரூ.1 லட்சத்தை கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து, கிராம வருவாய் அதிகாரியான கங்காத்ரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி அருகே வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணியை அடுத்த பூசிமலைகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 50), கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2-ந்தேதி வீட்டு மாடிப்பகுதியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.