என் மலர்
திருவண்ணாமலை
கீழ்பென்னாத்தூர் அருகே ரூ.2 கோடியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் முகமை திட்ட இயக்குனர் ப.ஜெயசுதா ஆய்வு செய்தார்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சோமாசிபாடி ஊராட்சியில் குப்பைகளை தரம்பிரிக்க ரூ 21½ லட்சத்தில் கட்டிடம் கட்டப்படுகிறது. இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார். மேலும் அருகிலுள்ளதண்ணீர் நிரம்பி இருந்த குளத்தை பார்வையிட்டார். அங்குள்ள மண்புழு உரம் தயாரிக்கும் இடத்தையும் பணியில் கண்டறிந்த சிறுசிறு குறைபாடுகளை விரைவாக சரி செய்யுமாறு கூறினார்.
இதனையடுத்து கலிங்கலேரி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் குழாய்இணைப்பு வழங்கப்பட்டுள்ள தை பார்வையிட்டும், வழங்கப்படாத குடும்பங்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்குமாறும் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய ஆணையாளர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் ள்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செங்கம் அருகே தடுப்பணை கட்டியதால் ஏரிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றதை பெண் போலீஸ் துணிச்சலாக தடுத்தார்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பெரியேரி காட்டில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் பலத்த மழை பெய்தும் உண்ணாமுலைபாளையம் மற்றும் கீழ்சிராம்பாளையம் பகுதி ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதைதொடர்ந்து தடுப்பணையில் இருந்து 2 கிராமத்திற்கும் தண்ணீர் எடுத்துச்செல்ல கிராம மக்கள் முயற்சி செய்தனர்.
இந்த நிலையில் கீழ்சிராம்பாளையம் பகுதிக்கு தண்ணீர் செல்ல கிராம மக்கள் வழிவகை செய்துள்ளனர். அதே நேரத்தில் உண்ணாமுலைபாளையம் கிராமத்தினர் தங்கள் கிராமத்திற்கு தண்ணீர் வராததால் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பவில்லை எனக்கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது உண்ணாமுலைபாளையம் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் சிவகாமி என்பவர், தற்கொலைக்கு முயன்ற நபரை தடுத்து காப்பாற்றினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்டதாக இரண்டு கிராமங்களையும் சேர்ந்த 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரண்டு கிராம மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கூறினர்.
திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காந்திநகர் 3-வது தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பங்க்பாபுவை (வயது 47) கடந்த 3-ந் தேதி அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் வைத்து மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது.
பங்க் பாபு கடந்த 2017-ம் ஆண்டு திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளராக இருந்த கனகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஆவார். இதனால் பழிக்கு பழியாக இச்சம்பவம் நடந்து இருக்குமோ என்று திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்த கொலை சம்பவம் பழிக்கு பழியாக கூலிப்படையை வைத்து நடத்தியது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக கூலிப்படையை ஏவிய கனகராஜின் மனைவி, மாமியார், மைத்துனர் மற்றும் உறவினர், நண்பர்கள் என 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கூலிப்படையினருக்கு பணம் பட்டுவாடா செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கூலிப்படையை சேர்ந்த வேலூர் அரி (23), ராமு (26), பிரதீப்குமார் (18), குருவி என்கிற சுரேஷ் (33), விவின்(36), சென்னையை சேர்ந்த வினோத் என்ற மூசா (27) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அங்குள்ள பெட்டிகளில் செலுத்தலாம் என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும், நோய் பரவல் முற்றிலும் குறையும் வரை பொது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்வு நாள் ரத்து செய்யப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெட்டியின் மூலமாக பெறப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் நலன் கருதி தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வைக்கப்படுகின்ற மனுக்கள் பெட்டியில் வரும் வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை gdp.tn.gov.in என்ற இணையதளத்திலும், tiruv-a-n-n-a-m-a-l-a-i-p-et-it-i-o-n-b-ox@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் மனுக்களாக அனுப்பி வைக்கலாம். திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி கொரோனா ஊரடங்கு காரணமாக எடுக்கப்பட்டு உள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் சந்தீப்நந்தூரி கேட்டுக்கொண்டு உள்ளார்.
களம்பூர் அருகே குடும்ப தகராறில் நெசவுத்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
களம்பூரை அடுத்த இலுப்பகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (வயது 35), நெசவுத்தொழிலாளி. இவரின் மனைவி சரஸ்வதி. கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. மதன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அவர், 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். 9-ந்தேதி மதன் வீட்டுக்கு வந்தபோது, கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த மதன் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலி தாங்க முடியாமல் அலறி கொண்டு எரியும் தீயுடன் வீதிக்கு ஓடி வந்தார். அவரை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மதன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மனைவி சரஸ்வதி களம்பூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வினாயகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட மதனுக்கு சசிகலா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.
செங்கத்தில் பேக்கரி மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:
செங்கத்தில் உள்ள பேக்கிரி ஒன்றில் கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (25) என்பவர் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். செங்கம் நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். இந்தநிலையில் நேற்று பணிக்கு வந்த வினோத்குமார் திடீரென வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
நீண்டநேரமாகியும் அவர் மீண்டும் வேலைக்கு வராததால், சக ஊழியர்கள் அவருடைய வீட்டுக்கு சென்று பார்த்தபோது வினோத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் 13-ந்தேதி குபேரர் கிரிவலத்தன்று பக்தர்கள், பொதுமக்கள் யாரும் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் நகரில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். இந்த கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என அஷ்டலிங்க கோவில்கள் உள்ளன.
இதில் 7-வது லிங்கமாக அமைந்துள்ள குபேர லிங்கத்தை கார்த்திகை மாத சிவராத்திரி அன்று குபேரர் வணங்கிய பின் கிரிவலம் வருவதாகவும், அந்த சமயத்தில் கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். கடந்த சில ஆண்டுகளாக கார்த்திகை மாத சிவராத்திரி அன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.
இந்த ஆண்டு 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை மாத சிவராத்திரி மற்றும் பிரதோஷம் வருகிறது. அன்று குபேரர் கிரிவலம் வருவதற்கு உகந்த நாள் என சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டு தற்போது பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 31-ந்தேதி வரை ஊரங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் நோய் பரவல் முற்றிலும் குறையும் வரை பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் 13-ந்தேதி குபேரர் கிரிவலத்தன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர லிங்கத்தை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்வதற்கும் வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் அன்றைய தினம் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் மூலமாக குபேர லிங்கம் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தொற்று பரவாமல் பொதுமக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியில் இருந்து இறக்கி, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆருத்ரா தரிசனத்திற்கு பிறகு தீப ‘மை’ பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா கடந்த மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு சிறப்பாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த 29-ந்தேதி நகரில் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மலையின் உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் அன்றில் இருந்து தொடர்ந்து நேற்று அதிகாலை வரை 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தது.
மகா தீபத்திற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், காடாதுணி ஆகியவை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீபத்திருவிழாவின் போது மகா தீபத்தை நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்கள் மகா தீபத்தை காண நேற்று முன்தினம் இரவு வரை திருவண்ணாமலைக்கு வருகை தந்து தீப தரிசனம் செய்தனர்.
மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதை மற்றும் உள்ளூர் மக்கள் அவர்களது வீட்டின் மொட்டை மாடியில் இருந்தும் மகா தீபத்தை தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை வரை மகா தீபம் காட்சி அளித்தது.
நேற்று காலை மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை 2,668 அடி மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மலையில் இருந்து கோவிலுக்கு தீப கொப்பரை கொண்டு வரும் வழிநெடுக்கிலும் பக்தர்கள் அதனை தொட்டு வணங்கினர். தொடர்ந்து மாலை கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் பிரசாதம் (தீப மை) அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு அணிவிக்கப்படும். பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.91 லட்சத்து 95 ஆயிரத்து 508-ம், 254 கிராம் தங்கமும், 543 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 20-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா தொடக்க நாளில் இருந்து நேற்று முன்தினம் மகா தீப தரிசனம் நிறைவு வரை உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து சாமி தாிசனம் செய்தனர். மேலும் ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.91 லட்சத்து 95 ஆயிரத்து 508-ம், 254 கிராம் தங்கமும், 543 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் போட்டியிடுவாரா என்பது தொடர்பாக அண்ணன் சத்தியநாராயணா பதில் அளித்தார்.
திருவண்ணாமலை:
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டும், புதிதாக கட்சி தொடங்க உள்ளதால் அதில் வெற்றி பெற வேண்டியும் மற்றும் உலக நன்மைக்காகவும் திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணா, அவரது மகன் ராமகிருஷ்ணன் மற்றும் மருமகள் கீதாபாய் ஆகியோர் மிருத்யுஞ்சய யாகம் நடத்தி வழிபட்டனர்.
பின்னர் சத்திய நாராயணா நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 31-ந்தேதி கட்சியின் பெயரை ரஜினிகாந்த் அறிவிப்பார். விமர்சனங்கள் செய்யும் அரசியல் கட்சியினருக்கு பதில் அளிப்பார்.
கட்சி தொடர்பாக எல்லா தகவலும் அவர் சொல்லுவார். அவருக்கு எல்லாவிதமான ஆசிர்வாதம் செய்வது தான் என்னுடைய வேலை.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரஉள்ளதால் கூட யாகம் நடத்தப்பட்டதாக வைத்து கொள்ளலாம். அவரும் நல்லா இருக்கனும், நீங்களும் நல்லா இருக்கனும். ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும். யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும்.
திராவிட கட்சிகளுக்கு கடைசி காலம் வந்துவிட்டது. யாரும் அவர்களை நம்பவில்லை. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அவர்கள், ரொம்ப நாள் இருக்க மாட்டார்கள். எல்லா மதத்தினரும் ஒன்று தான். எல்லா மக்களும் ஒன்று தான். நல்லது செய்தால் நல்லதே நடக்கும். எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும். பகவான் விரும்பினால் திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் போட்டியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டும், புதிதாக கட்சி தொடங்க உள்ளதால் அதில் வெற்றி பெற வேண்டியும் மற்றும் உலக நன்மைக்காகவும் திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணா, அவரது மகன் ராமகிருஷ்ணன் மற்றும் மருமகள் கீதாபாய் ஆகியோர் மிருத்யுஞ்சய யாகம் நடத்தி வழிபட்டனர்.
பின்னர் சத்திய நாராயணா நிருபர்களிடம் கூறியதாவது:-
அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தோம். அதைத் தொடர்ந்து இந்த கோவிலில் (அருணகிரிநாதர் கோவில்) சிவாச்சாரியார்கள் முன்னிலையில், நாட்டு மக்களும், எல்லா குடும்பங்களும் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக யாகம் நடத்தப்பட்டது.

வருகிற 31-ந்தேதி கட்சியின் பெயரை ரஜினிகாந்த் அறிவிப்பார். விமர்சனங்கள் செய்யும் அரசியல் கட்சியினருக்கு பதில் அளிப்பார்.
கட்சி தொடர்பாக எல்லா தகவலும் அவர் சொல்லுவார். அவருக்கு எல்லாவிதமான ஆசிர்வாதம் செய்வது தான் என்னுடைய வேலை.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரஉள்ளதால் கூட யாகம் நடத்தப்பட்டதாக வைத்து கொள்ளலாம். அவரும் நல்லா இருக்கனும், நீங்களும் நல்லா இருக்கனும். ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும். யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும்.
திராவிட கட்சிகளுக்கு கடைசி காலம் வந்துவிட்டது. யாரும் அவர்களை நம்பவில்லை. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அவர்கள், ரொம்ப நாள் இருக்க மாட்டார்கள். எல்லா மதத்தினரும் ஒன்று தான். எல்லா மக்களும் ஒன்று தான். நல்லது செய்தால் நல்லதே நடக்கும். எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும். பகவான் விரும்பினால் திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் போட்டியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தண்டராம்பட்டு அருகே பள்ளி மாணவியை கற்பழித்து 5 மாத கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலையை சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவி வீட்டில் இருந்து வருகிறார். பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்
இந்த நிலையில் தண்டராம்பட்டு அருகில் உள்ள தானிப்பாடியை அடுத்த பி.குயிலம் கிராமத்தை சேர்ந்த மாணவியின் உறவினர் கணேசன் (வயது 23) என்பவர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஆசை வார்த்தை கூறி மாணவியை கற்பழித்துள்ளார். இதனை மாணவி பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார்
நேற்று முன்தினம் மாணவிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச்சென்று பரிசோதித்தபோது மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தபோது கணேசன் தன்னை தொடர்ந்து கற்பழித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாணவியின் தாயார் தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கணேசனை கைது செய்து, தண்டராம்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலையில் நடந்த ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காந்திநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பங்க் பாபு (வயது 47). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 3-ந் தேதி அதேப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்ற போது மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்த கனகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.
அதனால் பழிக்கு பழியாக பங்க் பாபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அ.தி.மு.க. நகர செயலாளர் கனகராஜ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக கூலிப்படை வைத்து பங்க் பாபு கொலை செய்யப்பட்டது உறுதியானது.
அதைத்தொடர்ந்து இதுதொடர்பாக கூலிப்படையை ஏவிய கனகராஜின் மனைவி, மாமியார் உள்பட 3 பேரும், கூலிப்படையினருக்கு பணம் பட்டுவாடா செய்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி கனகராஜ் மனைவியின் தம்பி விவேகானந்தன் (30), அவரது நண்பர்கள் கார்த்திக் (26), ராஜேஷ் (28) ஆகிய 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
விவேகானந்தனுக்கு உதவும் வகையில் அவரது நண்பர்கள் கார்த்திக்கும், ராஜேசும், கொலை செய்யப்பட்ட பங்க் பாபு எங்கெங்கு செல்கிறார் என்று அவரது நடவடிக்கைகளை கண்காணித்து கூலிப்படையினருக்கு தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.






