என் மலர்
செய்திகள்

தற்கொலை
செங்கத்தில் பேக்கரி மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை
செங்கத்தில் பேக்கரி மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:
செங்கத்தில் உள்ள பேக்கிரி ஒன்றில் கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (25) என்பவர் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். செங்கம் நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். இந்தநிலையில் நேற்று பணிக்கு வந்த வினோத்குமார் திடீரென வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
நீண்டநேரமாகியும் அவர் மீண்டும் வேலைக்கு வராததால், சக ஊழியர்கள் அவருடைய வீட்டுக்கு சென்று பார்த்தபோது வினோத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






