என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை திருட்டு
    X
    நகை திருட்டு

    வந்தவாசியில் டிரைவர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு

    வந்தவாசியில் தனியார் கல்லூரி டிரைவர் வீட்டில் 30 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி, பெரிய காலனி, பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் ரவிச்சந்திரன். தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் சென்னையில் வசிக்கும் மருமகள் வீட்டிற்கு 5 நாட்களுக்கு முன்பு சென்று இருக்கிறார். இந்தநிலையில், வீீீடு திறந்து இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் உத்தரவின்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    சென்னையிலில் இருந்து வந்த ரவிச்சந்திரன், அவருடைய மனைவி சாரதாவிடம் விசாரித்தபோது, வீட்டின் பூட்டை திறந்து பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் இரண்டு வெள்ளி கொலுசுகள் திருட்டு போயிருப்பதாக தெரிவித்தனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    கைரேகை நிபுணர் விஜயகுமார் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தார். மோப்ப நாய் ‘மியாவ்’ வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×