search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி ஒன்றிய பள்ளி"

    • சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்றது.
    • மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினா்.

    திருப்பூர்:

    பல்லடத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தமிழக அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வாகி பரிசு பெற்றுள்ளது.

    குழந்தைகள் தினத்தையொட்டி அண்மையில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 108 பள்ளிகள் சிறந்தப் பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

    இதில், திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம், சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்றது.

    மாணவா்கள் எண்ணிக்கை உயா்வு, பள்ளி வளா்ச்சிக்கு பெற்றோா்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவா்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாவட்டத்தில் முதன்மைப் பள்ளியாக தோ்வுபெற்று மாநில அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வாகியுள்ளது.இதற்கான கேடயத்தை அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சேகா்பாபு ஆகியோா் வழங்கினா்.

    தமிழக அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வு பெற்ற்காக பள்ளித் தலைமையாசிரியா் ராஜ்குமாா் மற்றும் ஆசிரியா்களை அலகுமலை ஊராட்சித் தலைவா் தூயமணி, மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினா்.

    • தட்டு மற்றும் டம்ளர்கள் மொத்தம் 251 தன்னார்வலர் மூலம் பெறப்பட்டது.
    • மொத்தம் 251 உணவு உண்ணும் மாணவ- மாணவிகளுக்கு வழங்க தட்டு மற்றும் டம்ளர்கள் தயார் நிலையில் உள்ளது

    திருப்பூர் :

    பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாதப்பூர் கிராம ஊராட்சியில்அமைந்துள்ள கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளிகளில் 1 முதல் 5 முடிய கல்வி பயிலும்குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் பொருட்டு தேவையான தட்டு மற்றும் டம்ளர்கள் மொத்தம் 251 தன்னார்வலர் மூலம் பெறப்பட்டது.

    கள்ளக்கிணர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 40 உணவு உண்ணும் மாணவ- மாணவிகளும், கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 25உணவு உண்ணும் மாணவ- மாணவிகளும், சிங்கனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 11 உணவு உண்ணும் மாணவ- மாணவிகளும், தொட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 44 உணவு உண்ணும் மாணவ-மாணவிகளும், நல்லாக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 22 உணவு உண்ணும் மாணவ-மாணவிகளும், மாதப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 109 உணவு உண்ணும் மாணவ-மாணவிகளும் என மொத்தம் 251 உணவு உண்ணும் மாணவ- மாணவிகளுக்கு வழங்க தட்டு மற்றும் டம்ளர்கள் தயார் நிலையில் உள்ளது என பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கட்டிட டெண்டர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • கட்டிடங்களை இடிப்ப தற்கு கடந்த 8-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்புத் திட்டம் 2022-23-ன் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் மிகவும் பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்தி புதிய பள்ளிக் கட்டிடங்களை கட்டுவதற்கும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்ப டையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 77 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 78 புதிய பள்ளி கட்டிடங்கள், 18 வகுப்பறைகள் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டரால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கோடைகால விடுமுறை முடிந்து ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் துவங்கும் போது புதிய கட்டிடத்தில் இயங்கும் வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி 28.1.2022 அன்று வழங்கப்பட்டது. நல்லிருக்கை மற்றும் கொம்பூதி கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தவும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட பின்னரே பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நல்லிருக்கை மற்றும் கொம்பூதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களை இடிப்ப தற்கு கடந்த 8-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

    ஆனால் அதற்கு முன்பே இந்தப் பள்ளிகளில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்தப் பள்ளி கட்டிடங்களை இடிப்பதற்காக வழங்கிய ஒப்பந்தப்புள்ளி நிறுத்தம் செய்யப்பட்டு, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தொடர்புடைய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×