என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    தண்டராம்பட்டு அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அருகிலுள்ள தரடாப்பட்டு கிராமத்தில் எதிர் மேடு என்ற இடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர் சேட்டு, விற்பனையாளர்கள் மூர்த்தி, முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு விற்பனை பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டனர்.

    நேற்று காலை கடை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையின் பின்புறத்தின் சுவரில் துளை போட்டு மர்ம ஆசாமிகள் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    இக்கோவிலில் கடந்த மாதம் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் மழையின் காரணமாக தீபத் திருவிழாவின் போது சாமி தாிசனம் செய்ய வர முடியாத பக்தர்கள் தற்போது சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமானவர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் கொரோனா வைரசின் அடுத்த உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் வெளி நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தாிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பலர் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

    கொரோனா ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை குறைந்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் வலியுறுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவண்ணாமலை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    செங்கம் தாலுகா அஸ்வநாதசுரணை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன், கூலி தொழிலாளி. இவரது மனைவி சென்னம்மாள் (வயது 38). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சென்னம்மாள் குடும்ப சூழ்நிலை காரணமாக பலரிடம் கடன் வாங்கி அதனை திருப்பி கொடுக்க முடியாமல் மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் அவருக்கு கடந்த 2 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சென்னம்மாளின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒமைக்ரான் பயத்தால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்துவிட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா முடிவடைந்த நிலையில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர்.

    இதற்கிடையே பொதுமக்கள் மத்தியில் ஒமைக்ரான் வைரஸ் பீதி பரவியதால் வெளியூர் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    இதன் எதிரொலியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்துவிட்டது.

    இன்றும் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளது. அதிகளவில் ஐயப்ப பக்தர்கள் வருகை தந்தனர். அவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் வருகை நின்றுபோனதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.


    திருவண்ணாமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனேவ நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென் அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. மேலும் தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளிலும் மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மின் வாரிய செயற்பொறியாளர் மவுலீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    சேத்துப்பட்டு அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 9 மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக தேசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேசூர் அருகே உள்ள வயலூரில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பள்ளியின் சுற்றுப்புற கிராமங்களான கீழ்நமண்டி, பெரிய கொரகோட்டை, தென்தின்னலூர், கொரக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    அப்பகுதி மாணவர்கள் வேன் மூலம் பள்ளிக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

    இன்று காலையில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது.

    அப்போது தேசூர் அடுத்த பெலகாம்பூண்டி அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக வேன் டிரைவர் பின் பக்கமாக திரும்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராத விதமாக வயல்வெளி பள்ளத்தில் புகுந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதனால் வேனில் இருந்த மாணவ, மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் பள்ளி வேன் கவிழ்ந்து கிடப்பதை பார்த்தை சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.

    வேனில் இருந்து காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டனர். இதில் 7 மாணவர்கள், 2 மாணவிகள், டிரைவர் உள்பட 10 பேர் காயடைந்தனர். அவர்கள் தெள்ளார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து தேசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




    இன்று ஒரு நாள் மட்டும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது.
    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவிலில் குபேர கிரிவல நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த நாளில் குபேர லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக ஒரே நேரத்தில் அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள். பக்தர்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் கூடும்போது அரசால் தெரிவிக்கப்பட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறையை பின்பற்றுவது கடினமாகும்.

    எனவே கொரோனா தொற்று பரவலை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது.

    மேலும் இன்று ஆகம விதிப்படி அனைத்துப் பூஜைகளும் நடக்கிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய உதவிட வேண்டும்.

    மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவின்போது மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியிலிருந்து இறக்கப்பட்டது. ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் மை பக்தர்களுக்கு வழங்கப்படும்.
    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 19-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அந்த மகா தீபம் அன்றில் இருந்து தொடர்ந்து நேற்று அதிகாலை வரை 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தது. மகா தீபத்திற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், காடா துணி ஆகியவை அவ்வப்போது மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தீபத் திருவிழாவின்போது நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்கள் மகா தீபத்தை காண நேற்று முன்தினம் இரவு வரை திருவண்ணாமலைக்கு வருகை தந்து தீப தரிசனம் செய்தனர். மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதை மற்றும் உள்ளூர் மக்கள் அவர்களது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை வரை மகா தீபம் காட்சி அளித்தது.

    மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை நேற்று காலை 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மலையில் இருந்து கோவிலுக்கு தீப கொப்பரை கொண்டு வரும் வழிநெடுகிலும் பக்தர்கள் அதனை தொட்டு வணங்கினர். தொடர்ந்து மாலை கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வருகிற 20-ந் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் மை (தீப மை) அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு வைக்கப்படும். பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள முருகர் மரத்தேர் சுமைதாங்கி கல்லில் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
    திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம் தலைமையில் பாலாஜி, சங்கர் மற்றும் உதயராஜா இணைந்து தீபத்திருவிழா நிகழ்வை ஆவணம் செய்தனர்.

    அப்போது மாடவீதியில் உள்ள முருகர் மரத்தேர் சுமைதாங்கி கல்லில் எழுத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உருளையாக உள்ள அக்கல்லை மேலும் சுத்தம் செய்து பார்த்தபோது அதில் நான்கு வரிகளில் உள்ள கல்வெட்டு தென்பட்டது.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    ஸ்வஸ்தஸ்ரீ நல்லுழரன் விளக்கன் திருச்சிற்றம்பலமுடையான் என்று அக்கல்லில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் வரும் நல்லூர் என்பது ஊரைக் குறிப்பிடுவதோடு திருச்சிற்றம்பலம் என்ற நபர் அக்கல்லைத் தூண் செய்வதற்குக் கொடையாக தந்த தகவல் குறிப்பிடுகிறது.

    இக்கல்வெட்டில் வரும் விளக்கன் என்பது அவர் தந்தை பெயராக இருக்கக்கூடும். இக்கல்வெட்டு எழுத்து அமைந்திருப்பதை வைத்து பார்க்கும் போது இதன் காலத்தை கி.பி. 12-ம் நூற்றாண்டாகக் கருதலாம். சோழர்கள் காலத்தில் கோவில் மற்றும் மண்டப தூண்கள் வட்டவடிவில் அமைக்கப்படும். சில கோவில்களில் தூண்களிலும் கல்வெட்டுகள் இடம்பெறுவது வழக்கம். அதுபோல இத்துண்டு கல்லும் ஒரு பெரும் தூணின் உடைந்த பகுதியே ஆகும்.

    இதை வைத்துப் பார்க்கும்போது அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஒரு தூணோ அல்லது வேறு ஏதேனும் மண்டபத்தைச் சேர்ந்த தூணோ உடைந்து பின்னாளில் தேரை தாங்கும் கல்லாக உபயோகத்திற்கு வந்திருக்கக்கூடும். இந்த உடைந்த தூணில் உள்ள கல்வெட்டு நான்கு வரியே ஆயினும் இக்கல்வெட்டு தனி சிறப்பு வாய்ந்ததாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் காணப்பட்டாலும் அவை யாவும் மன்னர்களோ அல்லது மன்னர்களின் கீழ் பெரும் வணிகர்களோ மன்னர்களின் மெய்க்கீர்த்தியுடன் தானம் அளித்த தகவலை தருகிறது. ஆனால் இக்கல்வெட்டு சாமானியன் ஒருவன் கோவிலுக்குத் தூண் செய்வதற்குக் கல்லைக் கொடையாக வழங்கிய தகவல் தருகிறது. இதன் மூலம் சாமானியர்களும் அக்காலத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிகளில் பங்குபெற்று தங்களால் இயன்றதைச் செய்துள்ள தகவல் அறியமுடிகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் கடந்த 19-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.

    அன்றில் இருந்து தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளிக்கும்.

    11-வது நாளான நேற்றுடன் மகா தீபம் தரிசனம் நிறைவு பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விழா நாட்களில் கோவில் அனுமதி சீட்டு வைத்திருந்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீபத் திருவிழா நிறைவடைந்தது. விழா நாட்களில் கோவில் அனுமதி சீட்டு வைத்திருந்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    24-ந் தேதி முதல் வழக்கம் போல் பக்தர்கள் சாதாரணமாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தீபத் திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையில் நேற்று திருவண்ணாமலையில் காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது.

    மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்குள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக கோவிலில் சாமி மற்றும் அம்மன் சன்னதியில் பெரும்பாலானோர் அமர்வு தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் கோவிலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இதுகுறித்து கோவிலின் முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் விசேஷ நாட்கள் முடிந்து விட்டதால் இனி சாமியை அமர்வு தரிசனத்திற்கு சென்று கண்குளிர காணலாம் என்று வந்த பக்தர்கள் பெரும்பாலானோர் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் வரிசையில் வந்த பக்தர்கள் வேகமாக சாமி தரிசனம் செய்தனர்.
    பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் நடந்த முகாம்களில் வரிசையில் காத்திருந்து பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நடந்த 11 மெகா தடுப்பூசி முகாம்களில் 17 லட்சத்து 35 ஆயிரத்து 628 ஆண்கள், 8லட்சத்து 20 ஆயிரத்து 798 பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. நேற்று 12ம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டத்தின் 645 பகுதிகள், 41 நடமாடும் முகாம்களில் நடந்தது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 2,580 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். வாரத்தின் இரு நாட்கள் முகாம் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழன் அன்று நடந்த முகாமில் ஒரு லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பாதிக்கும் குறைவாக 43 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    விடுமுறை தினமான நேற்று தடுப்பூசி முகாம்களில் கூட்டம் காணப்பட்டது. பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் நடந்த முகாம்களில் வரிசையில் காத்திருந்து பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

     மாவட்டத்தில் 67 ஆயிரத்து 621 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 26.34 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    ×