என் மலர்
திருவண்ணாமலை
- ரேஷன் அரிசி பதுக்கியதால் நடவடிக்கை
- கோதுமையையும் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த மாதலாம்பாடி கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் 2 சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மங்கலம் போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது 2 சரக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரியை மங்கலம் போலீசார் ஒப்படைத்தனர்.
பின்னர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சியில் இருந்து 50 கிலோ எடை உள்ள 140 மூட்டைகளில் 7 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்து பாலீஷ் போட்டு பெங்களூருவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
மேலும் கோதுமையையும் கடத்தி வந்து மாவாக அரைத்து கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிசி ஆலை மேலாளர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
- தண்டராம்பட்டில் அதிகபட்சமாக 40 மில்லி மீட்டர் கொட்டியது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை நகரப் பகுதியில் மேகம் மந்தமாக காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.செங்கம், செய்யாறு, போளூர், ஆரணி வந்தவாசி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மற்ற இடங்களில் சாரல் மழை பெய்தது அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 40 மில்லி மீட்டர் மழை பெய்தது. இன்று காலையில் பல இடங்களில் மேகம் மந்தமாக காணப்பட்டது.
மழை காரணமாக குளிர்ந்த காற்றும், குளிர்ச்சியான சீதோஷண நிலை காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பரவலாக மழை பெய்து வருவதால் ஏரி குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:
திருவண்ணாமலை-3.1, ஆரணி-20.6, செய்யாறு-35.8, செங்கம்-35.8, ஜமுனாமரத்தூர்-15, வந்தவாசி-12.2, போளூர்-25.6, தண்டராம்பட்டு-41, கலசபாக்கம்-7, சேத்துப்பட்டு-1.2, கீழ்பென்னாத்தூர்-10.8, வெம்பாக்கம்-6.
- விழுப்புரம்-திருப்பதி ெரயில் ஒரு மணி நேரம் தாமதம்
- இடம் பிடிக்க முண்டியடித்து ஏறினர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் மற்றும் ரெயில் மூலம் திருவண்ணா மலையில் குவிந்தனர்.
நேற்று காலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இதையடுத்து சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால் அவதி அடைந்தனர்.பஸ்சில் உட்கார இடம் கிடைக்காததால் நின்று கொண்டே பயணம் செய்தனர்.
இதனால் சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல முடிவு செய்த பக்தர்கள் திருவண்ணாமலை ெரயில் நிலையத்தில் குவிந்தனர். இன்று அதிகாலை விழுப்புரத்திலிருந்து திருப்பதி நோக்கி செல்லும் பயணிகள் ரெயிலுக்காக காத்துக் கொண்டு இருந்தனர்.
நேரம் செல்ல செல்ல ரெயில் நிலையத்தில் பக்தர்களின் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது. சரியாக 6.30 மணிக்கு வரவேண்டிய விழுப்புரம் திருப்பதி பயணிகள் ெரயில் 7.45 மணிக்கு 1 மணி நேரம் தாமதமாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது.
அங்கு கூடியிருந்த பக்தர்கள் ரெயிலில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றதால் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஏற்கனவே கிரிவலப் பாதையில் நடந்து சென்று வந்த களைப்பில் இருந்த பக்தர்கள் இதனால் மிகுந்த சிரமம் அடைந்தனர். நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக வந்ததாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மலையையே சிவனாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.
- நகரில் காணும் இடமெங்கும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
திருவண்ணாமலையில் நேற்று பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றதால் தரிசனத்துக்கு 4 மணி நேரம் வரை ஆனது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் பின்புறம் உள்ள மலை அண்ணாமலை என அழைக்கப்படுகிறது. மலையையே சிவனாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.
பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மலையை சுற்றி 14 கி.மீ. தொலைவு கொண்ட கிரிவலம் செல்கின்றனர். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 4.06 மணியளவில் தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
நகரில் காணும் இடமெங்கும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. நள்ளிரவு முதலே அவர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.
அதுமட்டுமின்றி கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் மற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் பக்தர்கள் சாமி செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலானது.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.09 மணி வரை இருந்ததை கருத்தில் கொண்டு பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்
- திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் போல் பூண்டிருக்கும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் போல் பூண்டிருக்கும். புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று அதிகாலை 4.06 மணிக்கு தொடங்கி நாளை திங்கட்கிழமை அதிகாலை 3.09 மணி வரையிலும் உள்ளன.
இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே கிரிவலம் சென்றனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- போலீசார் நடைபாதைகளை ஒழுங்குபடுத்தினர்
- தீபாவளி திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை
ஆரணி:
ஆரணி காந்தி மார்க்கெட் பிரதான சாலையில் போக்குவ ரத்திற்கும், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுருந்த கடைகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந் ரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் அகற்றினர்.
மேலும் நடைபாதைகளை ஒழுங்குபடுத்தினர். வருகிற தீபாவளி பண்டிகையை அமைதியாகவும், சிறப்பாகவும் மக்கள், வியாபாரிகள் கொண்டாட குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாப்பாகவும் இருக்க சாலையை சீரமைப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
- கேமரா காட்சியில் சிக்கினார்
- சிறையில் அடைப்பு
வந்தவாசி:
வந்தவாசி பாலு உடையார் தெருவை சேர்ந்த வர் வாசு மூர்த்தி. இவர் தனது வீட்டின் அருகே பைக்கை நிறுத்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை எழுந்து பார்த்த போது மோட்டார்சைக் கிளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர் வந்தவாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார்.
போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களை ஆய்வு செய்ததில் திரு வள்ளுர் மாவட்டம் நெடுங் கல் கிராமம் சந்திரசேகர்புரத் தைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது 37) என்பவர் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது.
இதைய டுத்து போலீசார் அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, சந்திரசேகரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மஞ்சப்பை உபயோகிப்பது குறித்து அறிவுரை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூரில் நகரை சுத்தமாக வைத்திருக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சாலையோரம் கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப்பை உபயோகிப்பது குறித்து வியாபாரிகளுக்கு அறிவறுத்தப்பட்டு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கும் பணியை பேரூ ராட்சி தலைவர் கோ.சரவணன் தொடங்கி வைத்தார்.
வீடுகள், கடைகளில் துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஆங்காங்கே ஒட்டும் பணியும் நடந்தது. மேலும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு வீட் டைச் சுற்றிலும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க தண்ணீரை தேங்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் தனமல்லி, கவுன்சிலர்கள் பாக்கியராஜ், அம்பிகாராமதாஸ், பணியாளர் கள் முத்து, ராஜசேகரன், தமிழ்மணி உள்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த மாதலம்பாடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப் பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியின் மொத்த எடை 15 டன் ஆகும். தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்யப் பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் அரிசி ஆலையில் இருந்த 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூலவருக்கு சிறப்பு பூஜை
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
செங்கம்
செங்கத்தில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவர், உற்சவர் மற்றும் கோவிலில் உள்ள அனைத்து சந்ததிகளிலும் மூலவர்களுக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து வண்ணமலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செங்கம்
செங்கத்தில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவர், உற்சவர் மற்றும் கோவிலில் உள்ள அனைத்து சந்ததிகளிலும் மூலவர்களுக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து வண்ணமலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- புரட்டாசி பவுர்ணமி முன்னிட்டு வழிபாடு
- இன்று அதிகாலை முதல் நாளை அதிகாலை வரை பவுர்ணமி உள்ளது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் போல் பூண்டிருக்கும். புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று அதிகாலை 4.06 மணிக்கு தொடங்கி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.09 மணி வரையிலும் உள்ளன.
இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கிரிவலம் சென்றனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் பைக் விபத்தில் காயம் அடைந்தார்.
- சிகிச்சை முடிந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவரைப் பார்க்க ரேவதி வந்திருந்தார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மொழுகம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 42). முன்னாள் ராணுவ வீரர். ஆரணி வி.ஏ.கே நகர் அருகில் உள்ள தேனருவி நகரில் வசித்து வந்தார். இவரது மனைவி ரேவதி, பிரியதர்ஷினி என்ற மகள் லிங்கேஸ்வரன், நிதின் ஆகிய மகன்கள் உள்ளனர்.
கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி அவரது மகன் மகளுடன் ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் பைக் விபத்தில் காயம் அடைந்தார். சிகிச்சை முடிந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவரைப் பார்க்க ரேவதி வந்திருந்தார். அன்று இரவு ரேவதி அங்கேயே தங்கினார்.
இந்த நிலையில் வெற்றிவேல் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேவதி அவரது கள்ளக்காதலன் நாகராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து ரேவதி நாகராஜ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வேலூர் கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தார். 3 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கணவனை கொடூரமாக கொலை செய்தது குறித்து ரேவதி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் வெற்றிவேலின் தங்கை பொம்மி என்பவரின் கணவர் காமக்கூர் பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகராஜிடன் (41) கடந்த 3 ஆண்டுக்கு முன்பு எனக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம்.
இதனையறிந்த எனது கணவர் கள்ளத்தொடர்பை கைவிடும் படி கூறினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நான் எனது மகள் மகன்களை அழைத்துக்கொண்டு ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள எனது தாய் வீட்டிற்கு சென்று விட்டேன்.
இதுகுறித்து நாகராஜுடம் தெரிவித்தேன். இருவரும் சேர்ந்து கூலிப்படை மூலம் வெற்றிவேலை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.
கடந்த மார்ச் மாதம் கூலிப்படை நபரான கண்ணமங்கலம் அருகே உள்ள மோட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ராஜேஷ் (32) என்பவரை அணுகினோம். ரூ. 10 லட்சம் பேரம் பேசி அட்வான்சாக 2 லட்சம் ரூபாய் கொடுத்தோம். கடந்த 6 மாதங்களாக எனது கணவரை கொலை செய்வதற்காக சமயம் பார்த்து காத்திருந்தேன்.
அப்போதுதான் எனது கணவர் வெற்றிவேலுக்கு பைக் விபத்தில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அவரை வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தேன். அங்கு சிகிச்சை முடிந்து அவருடன் வீட்டிற்கு வந்தேன்.
கணவன் தனியாக இருப்பதை பயன்படுத்தி அவரை தீர்த்து கட்ட இதுதான் நல்ல சமயம் என முடிவு செய்தேன்.
இது குறித்து எனது கள்ளக்காதலன் நாகராஜுக்கு தகவல் தெரிவித்தேன். சம்பவத்தன்று அதிகாலை நாகராஜ் மற்றும் ஏற்கனவே பணம் கொடுத்து வைத்திருந்த கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் இருவரையும் வீட்டுக்கு வரவழைத்தேன். அப்போது என்னுடைய கணவர் வெற்றிவேல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரது கழுத்தில் ராஜேஷ் ஓங்கி குத்தினார். வலி தாங்காமல் கண் விழித்து அவர் சத்தம் போட முயன்றார். உடனே 3 பேரும் சேர்ந்து அவரை கட்டிலிலேயே அமுக்கி பிடித்தோம்.
நான் எனது கணவரின் கால்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ், வெற்றிவேலின் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்தார். அவர்களை யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைத்தேன். பின்னர் எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என அவரது உறவினர்களிடம் போன் மூலம் தெரிவித்தேன்.
அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது இறந்தது தெரியவந்தது. என் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசில் புகார் தெரிவித்தனர் .
அப்போது கொள்ளையர்கள் வீட்டிற்கு வந்து தாக்கியதாக கூறி நாடகமாடினேன். ஆனாலும் போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






