என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Confidential information to Mangalam police"

    • குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த மாதலம்பாடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப் பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியின் மொத்த எடை 15 டன் ஆகும். தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்யப் பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் அரிசி ஆலையில் இருந்த 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×