என் மலர்
நீங்கள் தேடியது "purattasi pournami"
- இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.
- அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள்.
ஐப்பசி பௌர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பௌர்ணமி திருநாளில் சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு.
அந்த வகையில் புரட்டாசி பௌர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும்,
அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும்
விசேஷ பலன்கள் கைகூடும்.
பிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி.
அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களைப் பெற்றான்.
அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள்.
அவற்றைக்கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான், திரிபுரங்களுக்கும் அதிபதியான அந்த அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.
அவர்களை ரட்சிக்கத் திருவுளம்கொண்ட பிள்ளையார் அசுரன்மீது போர்தொடுத்தார்.
போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவ கணை.
திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றிக் கலந்தான்.
அப்படி அவன் வீடுபேறடைந்த திருநாள், புரட்டாசி மாத பௌர்ணமி தினமாகும்.
அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள்.
இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.
புரட்டாசி பௌர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும்.
நண்பகலில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும்.
மாலை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்
- திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் போல் பூண்டிருக்கும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் போல் பூண்டிருக்கும். புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று அதிகாலை 4.06 மணிக்கு தொடங்கி நாளை திங்கட்கிழமை அதிகாலை 3.09 மணி வரையிலும் உள்ளன.
இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே கிரிவலம் சென்றனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.






