search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "To prevent crime"

    • அவிநாசி நகரப்பகுதியில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் வணிக நிறுவனங்களில் நடைபெறுகிறது.
    • சாலையோரங்களில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்களை கண்டுபிடிக்கவும் உதவும்.

    அவிநாசி

    அவிநாசி காவல் துறை சாா்பில் குற்றச்சம்பவங்களைத் தடுப்பது தொடா்பான வணிக நிறுவனங்களுடனான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் ராஜவேல் தலைமை வகித்தாா்.

    அவிநாசி நகரப்பகுதியில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் வணிக நிறுவனங்களில் நடைபெறுகிறது. குறிப்பாக பெண்கள் இருக்கும் நிறுவனங்களைப் பாா்த்து, பொருள்களை வாங்குவது போலவும், முகவரி கேட்பது போலவும் அவா்களிடம் நூதன முறையில் நகைப் பறிப்பில் ஈடுபடுகின்றனா்.

    மேலும் சாலையோரங்களில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்களை அடையாளம் காணவும் வணிக நிறுவனத்தினா் சிசிடிவி/. கேமரா பொருத்தி காவல் துறைக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    • போலீசார் நடைபாதைகளை ஒழுங்குபடுத்தினர்
    • தீபாவளி திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை

    ஆரணி:

    ஆரணி காந்தி மார்க்கெட் பிரதான சாலையில் போக்குவ ரத்திற்கும், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுருந்த கடைகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந் ரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் அகற்றினர்.

    மேலும் நடைபாதைகளை ஒழுங்குபடுத்தினர். வருகிற தீபாவளி பண்டிகையை அமைதியாகவும், சிறப்பாகவும் மக்கள், வியாபாரிகள் கொண்டாட குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாப்பாகவும் இருக்க சாலையை சீரமைப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

    ×