குற்றச்சம்பவங்களை தடுக்க வணிக நிறுவனங்களில் சிசிடிவி., கேமரா பொருத்த வேண்டும். - போலீசார் அறிவுறுத்தல்

அவிநாசி நகரப்பகுதியில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் வணிக நிறுவனங்களில் நடைபெறுகிறது. சாலையோரங்களில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்களை கண்டுபிடிக்கவும் உதவும்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

அவிநாசி

அவிநாசி காவல் துறை சாா்பில் குற்றச்சம்பவங்களைத் தடுப்பது தொடா்பான வணிக நிறுவனங்களுடனான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் ராஜவேல் தலைமை வகித்தாா்.

அவிநாசி நகரப்பகுதியில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் வணிக நிறுவனங்களில் நடைபெறுகிறது. குறிப்பாக பெண்கள் இருக்கும் நிறுவனங்களைப் பாா்த்து, பொருள்களை வாங்குவது போலவும், முகவரி கேட்பது போலவும் அவா்களிடம் நூதன முறையில் நகைப் பறிப்பில் ஈடுபடுகின்றனா்.

மேலும் சாலையோரங்களில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்களை அடையாளம் காணவும் வணிக நிறுவனத்தினா் சிசிடிவி/. கேமரா பொருத்தி காவல் துறைக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com