என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • 8 பைக், 15 செல்போன்கள் பறிமுதல்
    • 5 பேர் கைது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை டவுன், கிரிவலப்பாதை, பைபாஸ் ரிங் ரோடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் குபம்பல் வழிப்பறி செய்ய முயன்றனர்.

    வழிப்பறி கொள்ளை யா்களை பிடிக்க திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் வழிப்பறியில் பறிக்கப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ. எண்களை வைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டது.

    சென்னை மதனந்தபுரம் மாதா நகர் பகுதியை சேர்ந்த செல்வமணி (வயது 21) மற்றும் 18 வயதிக்கு உட்பட்ட திருவண்ணாமலையை சேர்ந்த 4 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் 5 பேரையும் பிடித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்கள், 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சிசிடிவி காட்சி ஆய்வு
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன் மண்டி வீதியில் ஆரணி டவுன் வி.ஏ.கே நகர் பகுதியை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் செல்போன் உதிரி பாகம் மற்றும் ரீ சார்ஜ் கடை நடத்தி வருகின்றார்.

    நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து கருணாகரன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது டிப்டாப் ஆசாமி ஒருவர் கடையில் உள்ளே வந்தார்.

    சிறிது நேரத்தில் திரும்பி பார்த்த போது டிப்டாப் ஆசாமி காணவில்லை இதனையடுத்து தனது கடையில் மேஜை மீது வைத்திருந்த செல்போன் காணாததை கண்டு கருணாகரன் அதிர்ச்சியடைந்தார். மேலும் தன் செல்போன் கடையில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தார்.

    அப்போது டிப்டாப் ஆசாமி செல் போனை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து கருணாகரன் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.

    • பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல துணைச் செயலாளர் டி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் விவேகானந்தன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசாணை 56 பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உதவி பேராசிரியர்கள் நியமன முறையில் அனுபவம் மற்றும் நேர்காணல் முறையை பின்பற்ற வேண்டும், சட்டக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர் களுக்கு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், மாநிலத் தகுதி தேர்வு உடனடியாக நடைபெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் 60 கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் நுர்அகமது நன்றி கூறினார்.

    • சொந்த பிரச்சினையால் மகளும், மருமகனும் தற்கொலை
    • நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதி

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை டவுன் புது வாணியங்குளம் முதல் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி ஆதிலட்சுமி (வயது 41). இவர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆதிலட்சுமி கூறியதாவது:-

    கணவரால் கைவிடப்பட்ட நான் ஜாதகம் பார்க்கும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் மகளும், அவரது கணவரும் சொந்த பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.

    இதனால் மூத்த மகளின் குழந்தைகளை அவரது கணவரின் உறவினர்கள் அழைத்து சென்று விட்டனர். தற்போது தனது பேரக்குழந்தைகளை ராஜஸ்தான், ஆந்திரா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் சிவன், பார்வதி போன்ற கடவுள் வேஷமிட்டு பிச்சை எடுக்க வைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

    எனது பேரக்குழந்தைகள் பிச்சை எடுத்ததற்கான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எனது பேரக்குழந்தைகளை கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், போளூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுத்து எனது பேரக்குழந்தைகளை அவர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அப்போது அவருடன் மற்ற மகள்களும் இருந்தனர். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • கலெக்டர் முருகேஷ் உத்தரவு
    • வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது

    திருவண்ணாமலை:

    ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக 12 தாலுகாக்களுக்கும் துணை கலெக்டர் நிலையில் 12 நியமன அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் தலைமையில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு குழு, தேடுதல் மற்றும் மீட்பு குழு, வெளியேற்றக் குழு மற்றும் நிவாரண மையம், தங்குமிடம் மேலாண்மை குழு ஆகிய 4 குழுக்கள் மற்றும் 4 நகராட்சிகளுக்கும் நகராட்சி ஆணையர்களை நியமன அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நீர்வரத்து கால்வா ய்களில் உள்ள ஆக்கிர மிப்புகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஒருங்கி ணைப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் உத்தர விட்டார்.

    ஒருங்கி ணைப்பு குழு கூதிரு வண்ணா மலை மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாக பருவமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் தொடர்பாக பொது மக்கள் தங்கள் சந்தே கங்களுக்கு தொடர்பு கொள்ளும் வகையில் கலெக்டர் அலுவல கத்தில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான தங்களின் சந்தேகங்கள், மழை வெள்ள காலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கட்டணமில்லா தொலை பேசிஎண் - 1077, மற்றும் 04175-232377 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். திருவண்ணாமலை தாலுகாவை தவிர மற்ற தாலுகாக்களில் வசிப்பவர்கள் தொலைபேசி எண். 04175-1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

    மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பழைய பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களை தொடர் மழையின் போது பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, உதவி கலெக்டர்கள் வெற்றிவேல், தனலட்சுமி, மந்தாகினி, துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதகுகளை சீரமைக்க வலியுறுத்தல்
    • நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஏரி மதகுகள் மூடப்பட்டு விவசாய நிலங்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த ஏரிக்கு கீழ் நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் கிணற்றில் உள்ள தண்ணீரை பயன் படுத்தி வருகின்றனர்.

    மேலும் ஏரிக்கு வரும் கால்வாய் மூலம் கழிவு நீர் கலப்பதால், தண்ணீர் முழுவதும் கழிவு நீராக உள்ளது. விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் உள்ளது.

    எனவே கண்ணமங்கலம் ஏரி மதகுகளை சீரமைக்க பலமுறை பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் செய்தும் பலனில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று கண்ணமங்கலம் ஏரிக்கரை மீது பள்ளம் தோண்டினர்.

    இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் பகுதி வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் விரைந்து சென்று பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.

    மேலும் ஏரி மதகுகளை சீரமைக்க உடனடியாக பொதுப்பணித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் கணணமங்கலம் ஏரிப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • பல்வேறு பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது
    • 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஒலி-ஒளி மேடை அலங்காரம் மற்றும் சப்ளையர்ஸ் பந்தல் அமைப்பாளர் நலச் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.

    மேலும் இவ்விழாற்கு சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஜீவா அனைவரையும் வரவேற்றார் சங்கத் தலைவர் தயாநிதி முன்னிலை வகித்தார்.

    துணைத் தலைவர் சேட்டு தலைமையில் தாங்கினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி, நகர மன்ற துணை தலைவர் பாரி பாபு, டி. மற்றும் ஒலி ஒளி சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வம் மாவட்ட பொறுப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பல்வேறு ஊர்களில் கொண்டுவரப்பட்ட ஒலி ஒளி அமைப்பு பொருட்கள் பந்தல் அமைப்பு பொருட்கள் அலங்காரப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கபட்டடன.

    இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், துரை மாமது அதிமுக கவுன்சிலர் சுதாகுமார் ஒலி ஒளி மேடை அலங்காரம் சப்ளையர் பந்தல் அமைப்பாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இறுதியில் செயற்குழு உறுப்பினர் மனோகர் நன்றி கூறினார்

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன், வைத்தியர் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் மனைவி உமா மகேஸ்வரி (வயது 48). இவர் தள்ளு வண்டியில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இவரது மகளை சென்னையில் வேலை செய்யும் இடத்தில் சென்று விட்டு விட்டுநேற்று காலை வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் செயின், 2 தங்க மோதிரம், தங்க கால் காசு மொத்தம் 4½ பவுன் மற்றும், வெள்ளி கால் கொலுசு, வெள்ளி வளையல் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் மகேஸ்வரி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதால் நடவடிக்கை
    • திருவண்ணாமலை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

    திருவண்ணாமலை:

    வந்தவாசி தாலுகா வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 31). இவர் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி 9 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து உள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் நவீன்குமாரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை திருவண்ணா மலை சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.

    அதில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த நவீன் குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதைத்தொடர்ந்து நவீன்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே அத்திமூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (வயது 32) போளூர் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகின்றார்.

    கடந்த 6-ம் தேதி காலை பணிக்கு சென்று மீண்டும் இரவு 9.30 அளவில் அத்திமூருக்கு பைக்கில் வந்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரி அருகே எதிரில் மன்சூராபாத்தை சேர்ந்த ராஜமாணிக்கம என்பவரின் மகன் விக்னேஷ் (வயது 17) மாம்பட்டிலிருந்து மன்சுராபாத்திற்கு பைக்கில் வந்தார்.

    அப்போது 2 பைக்கும் எதிர்பாராதவிதமாக ேமாதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் போளூர் அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மணிவண்ணன் சென்னை தனியார் ஆஸ்பத்திரி அனுமதிக்கப்பட்டிருந்தார். விக்னேஷ் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வேலூர் ஆஸ்பத்திரி சேர்த்த விக்னேஷ் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.

    இதுகுறித்து மணிவண்ணன் மனைவி சங்கீதா போளூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்

    செங்கம்:

    செங்கம் முதல் போளூர் வரை உள்ள நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    செங்கம் -போளூர் சாலை முதல் முன்னூர்மங்கலம், மாரியம்மன் கோவில், புதுப்பாளையம், காரப்பட்டு, கடலாடி, உள்பட போளூர் வரை நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    வேகத்தடைகளுக்கு எந்த வண்ணமும் பூசாததால் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் வேகத்தடைகளில் சிக்கி விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது.

    மேலும் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.

    நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லாமலேயே வேகத்தடை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து சேலம், பெங்களூர், கோவை போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் கனரக லாரிகள், டிப்பர் லாரிகள் உட்பட பஸ்கள், கார் உள்ளிட்டவைகள் போளூர் வழியாக செங்கத்தை கடந்து செல்கின்றது.

    ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி செல்கின்றது. நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைகளை அகற்றி நெடுஞ்சாலையில் இருந்து செல்லும் இணைப்பு கிராமப்புற சாலைகளில் வேகத்தடைகளை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கீழ்பென்னாத்தூர் பஸ் நிலைய வளாகத்தில் நிகழ்ச்சி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் 54 -வது பிறந்தநாள் முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மேற்கு மற்றும் தெற்கு ஒன்றியம், கீழ்பென்னாத்தூர் நகரம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா கீழ்பென்னாத்தூர் பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

    கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் ஆர்.ஏ. கனகராஜ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், வன்னியர் சங்க துணை செயலாளர் நாராயணசாமி, ஒன்றிய செயலாளர்கள் குணசேகர், கணபதி, மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் கே.ஆர்.முருகன் வரவேற்றார்.

    திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பக்தா என்கின்ற பக்தவச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பழம், காய் என பல்வேறுவகையான 1100 -மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் ராஜீவ்காந்தி, மகளிர் அணி சங்க தலைவர் ஜெயந்தி முருகன், கீழ்பென்னாத்தூர் நகரதலைவர் தேசிங்கு, கிளைச்செயலாளர்கள் தங்கதுரை, காந்தி, சத்ரியன், அசோக்கு.மார், நகர அமைப்பு செயலாளர் தமிழ்மணி, ஊடகப் பேரவை செயலாளர்கள் மணிரத்தினம், ஜெயக்குமார், க.சா. முருகன் மற்றும் ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட பாமக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்கள். நகர தலைவர் தேசிங்கு நன்றி கூறினார்.

    ×