என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கல்லூரி விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.

    செய்யாறு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல துணைச் செயலாளர் டி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் விவேகானந்தன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசாணை 56 பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உதவி பேராசிரியர்கள் நியமன முறையில் அனுபவம் மற்றும் நேர்காணல் முறையை பின்பற்ற வேண்டும், சட்டக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர் களுக்கு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், மாநிலத் தகுதி தேர்வு உடனடியாக நடைபெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் 60 கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் நுர்அகமது நன்றி கூறினார்.

    Next Story
    ×