என் மலர்
உள்ளூர் செய்திகள்

பந்தல் அமைப்பாளர் சங்க ஆண்டு விழா
- பல்வேறு பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது
- 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஒலி-ஒளி மேடை அலங்காரம் மற்றும் சப்ளையர்ஸ் பந்தல் அமைப்பாளர் நலச் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.
மேலும் இவ்விழாற்கு சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஜீவா அனைவரையும் வரவேற்றார் சங்கத் தலைவர் தயாநிதி முன்னிலை வகித்தார்.
துணைத் தலைவர் சேட்டு தலைமையில் தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி, நகர மன்ற துணை தலைவர் பாரி பாபு, டி. மற்றும் ஒலி ஒளி சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வம் மாவட்ட பொறுப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பல்வேறு ஊர்களில் கொண்டுவரப்பட்ட ஒலி ஒளி அமைப்பு பொருட்கள் பந்தல் அமைப்பு பொருட்கள் அலங்காரப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கபட்டடன.
இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், துரை மாமது அதிமுக கவுன்சிலர் சுதாகுமார் ஒலி ஒளி மேடை அலங்காரம் சப்ளையர் பந்தல் அமைப்பாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இறுதியில் செயற்குழு உறுப்பினர் மனோகர் நன்றி கூறினார்






