search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female dharna"

    • கணவர் தன்னை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தல்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த மேல் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் அரசு பஸ் டிரைவர் இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக குடியாத்தம் அடுத்த எஸ்.மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா (வயது 27) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    திருமணம் முடிந்து 8 மாதங்கள் மட்டுமே சசிகலா கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏற்ப்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

    இதன் சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடைப்பெற்று வருவதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் சசிகலா நேற்று இரவு தன்கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என மேல்பள்ளிப்பட்டில் இருக்கும் அவரின் கணவர் வீட்டிற்கு சென்று என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த பிரபாகரனின் பெற்றோர், கோர்ட்டில் வழக்கு முடிவுக்கு வரட்டும் அப்பறம் ஏற்றுக்கொள்கின்றோம் என்றனர். இதனால் அவர் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுப்பட்டார். தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் அப்பெண்ணிடம் பேசசுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

    • வீட்டில் கொள்ளையடிக்க முயன்றவர்களை கைது செய்யக்கோரி போராட்டம்
    • ஜோலார்பேட்டையில் பரபரப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் பகுதியை சேர்ந்த வர் இளையகிருஷ்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்க ளுக்கும், உறவினர்களுக்கும் இடையே, தமிழ்செல்வி வசிக்கும் வீடு சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது.

    இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வி வீட்டை பூட்டி விட்டு, துக்க நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டை உடைக்க முயன் றிருப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோலோர் பேட்டை போலீசார் சென்று மூன்று பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து உள்ளனர். ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தமிழ்செல்வியை போலீ சார் அலைக்கழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் விரக்தி அடைந்த தமிழ்செல்வி, வீட்டில் திருட முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று மாலை உடைத்த பூட்டுகளுடன் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டார்.

    இதனையடுத்து போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் ஆகியோர் இரு தரப்பின ரையும் வரவழைத்து விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்ததன் பேரில் தமிழ்செல்வி தர்ணாவை கைவிட்டு சென்றார்.

    இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சொந்த பிரச்சினையால் மகளும், மருமகனும் தற்கொலை
    • நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதி

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை டவுன் புது வாணியங்குளம் முதல் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி ஆதிலட்சுமி (வயது 41). இவர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆதிலட்சுமி கூறியதாவது:-

    கணவரால் கைவிடப்பட்ட நான் ஜாதகம் பார்க்கும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் மகளும், அவரது கணவரும் சொந்த பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.

    இதனால் மூத்த மகளின் குழந்தைகளை அவரது கணவரின் உறவினர்கள் அழைத்து சென்று விட்டனர். தற்போது தனது பேரக்குழந்தைகளை ராஜஸ்தான், ஆந்திரா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் சிவன், பார்வதி போன்ற கடவுள் வேஷமிட்டு பிச்சை எடுக்க வைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

    எனது பேரக்குழந்தைகள் பிச்சை எடுத்ததற்கான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எனது பேரக்குழந்தைகளை கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், போளூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுத்து எனது பேரக்குழந்தைகளை அவர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அப்போது அவருடன் மற்ற மகள்களும் இருந்தனர். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    ×