என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கம் -போளூர் நெடுஞ்சாலையில் வேகத்தடைகளை அகற்ற வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்
செங்கம்:
செங்கம் முதல் போளூர் வரை உள்ள நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
செங்கம் -போளூர் சாலை முதல் முன்னூர்மங்கலம், மாரியம்மன் கோவில், புதுப்பாளையம், காரப்பட்டு, கடலாடி, உள்பட போளூர் வரை நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
வேகத்தடைகளுக்கு எந்த வண்ணமும் பூசாததால் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் வேகத்தடைகளில் சிக்கி விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது.
மேலும் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லாமலேயே வேகத்தடை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து சேலம், பெங்களூர், கோவை போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் கனரக லாரிகள், டிப்பர் லாரிகள் உட்பட பஸ்கள், கார் உள்ளிட்டவைகள் போளூர் வழியாக செங்கத்தை கடந்து செல்கின்றது.
ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி செல்கின்றது. நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைகளை அகற்றி நெடுஞ்சாலையில் இருந்து செல்லும் இணைப்பு கிராமப்புற சாலைகளில் வேகத்தடைகளை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






