என் மலர்
நீங்கள் தேடியது "Hijacking on Kriwalabadi"
- 8 பைக், 15 செல்போன்கள் பறிமுதல்
- 5 பேர் கைது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை டவுன், கிரிவலப்பாதை, பைபாஸ் ரிங் ரோடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் குபம்பல் வழிப்பறி செய்ய முயன்றனர்.
வழிப்பறி கொள்ளை யா்களை பிடிக்க திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் வழிப்பறியில் பறிக்கப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ. எண்களை வைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டது.
சென்னை மதனந்தபுரம் மாதா நகர் பகுதியை சேர்ந்த செல்வமணி (வயது 21) மற்றும் 18 வயதிக்கு உட்பட்ட திருவண்ணாமலையை சேர்ந்த 4 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் 5 பேரையும் பிடித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்கள், 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






