என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • போலீஸ் நிலையம் முன்பு பஸ்சை நிறுத்திய டிரைவர்
    • போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் இருந்து சேத்துப்பட்டு, பெரணமல்லூர், செய்யார், சென்எனைக்கு அரசு பஸ் இயங்கி வருகிறது.

    இந்தப் பஸ் காலை, மாலை, இரு வேளையிலும் கல்லூரி நேரத்தில் செல்வதால் செய்யாறு, அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் இந்த பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

    நேற்று வழக்கம்போல் மாலை செய்யாறில் இருந்து பெரணமல்லூர், சேத்துப்பட்டு, வழியாக போளூர். நோக்கி பஸ் புறப்பட்டது. பஸ்சில் வழக்கம் போல் சுமார் 70-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.

    பஸ்சில் வந்த கலை கல்லூரி மாணவர்கள் ஒலி, எழுப்பியவாறு ரகளை செய்தும் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் வைத்தும் பயணிகளுக்கும், டிரைவர், கண்டக்டருக்கு, இடையூறு செய்து வந்தனர்.

    தொடர்ந்து இதை கண்டித்த டிரைவர், கண்டக்டர், இருவரும் மாணவர்களை எச்சரித்து வந்தனர்.ஆனால் மாணவர்கள் ரகளை செய்வதை நிறுத்தாமல் தொடர்ந்து இடையூறு செய்து வந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் பெரணமல்லூர், போலீஸ் நிலையத்தின் முன்பு திடீரென பஸ்சை நிறுத்திவிட்டு உள்ளே சென்று மாணவர் ரகளை குறித்து புகார் அளித்தார்.

    உடனடியாக கல்லூரி மாணவர்களை போலீசார் அழைத்து பயணிகளுக்கும் டிரைவருக்கும், ஓட்டுனருக்கும் நீங்கள் தொந்தரவு செய்யக்கூடாது ஒலிபெருக்கி மூலம் பாடல்களை அதிக ஒளி வைத்து மற்றவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.

    மேலும் மீறினால் தகுந்த நடவடிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 

    • வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்
    • கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த குப்பம் மலையடிவாரத்தில் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை விழுங்கி மயங்கி கிடந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சந்தவாசல் வனத்துறையினர் சக்திவேல் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மலைப்பாம்பை பிடித்து இரும்பிலி ஆணைக்கல் காப்புக் காட்டில் கொண்டு போய் விட்டனர். இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • தூத்துக்குடியில் இருந்து வேலூருக்கு அழைத்து வந்தபோது தப்பி ஓட்டம்
    • கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்

    திருவண்ணாமலை:

    தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவனை, கொலை வழக்கு ஒன்றில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் பிடித்து, திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    இந்நிலையில், சிறுவனுக்கு அங்கு அச்சுறுத்தல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுவனை வேலுார் அரசினர் பாதுகாப்பு இல்லத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து, திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்திலிருந்து சிறுவனை தூத்துக்குடி ஆயுதப்படை போலீசார் அரசு பஸ்சில் நேற்று முன்தினம் அழைத்து வந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை டோல்கேட் அருகே வந்தபோது, திடீரென பஸ் பழுதடைந்து நின்றுவிட்டதாக கூறப் படுகிறது. இதனால், பஸ்சிலிருந்த பயணிகள் கீழே இறங்கியுள்ளனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திய சிறுவன், அங்கிருந்து தப்பி ஓடினான். இதைக்கண்டபோலீசார் விரட்டிச்சென்றனர். ஆனாலும், இரவுநேரம் என்பதால், சிறுவன் எந்தவழியாக தப்பினான் என கண்டுபிடிக்க முடியாமல் போனது.

    இதுகுறித்து தூத்துக்குடி போலீசார் உடனடியாக திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குணசேகரனுக்கு தகவல் தெரி வித்தனர்.

    டிஎஸ்பி உத்தரவின்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று தப்பியோடிய சிறுவனை தேடும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர்.

    டோல்கேட் அருகே உள்ள கரும் புத்தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, துாத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து,சிறுவனை பாதுகாப்பாக வேலுாருக்கு அழைத்துச்சென்றனர்.

    • தூத்துக்குடியில் இருந்து வேலூருக்கு அைழத்து வந்தபோது தப்பி ஓட்டம்
    • கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்

    திருவண்ணாமலை:

    தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவனை, கொலை வழக்கு ஒன்றில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் பிடித்து, திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    இந்நிலையில், சிறுவனுக்கு அங்கு அச்சுறுத்தல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுவனை வேலுார் அரசினர் பாதுகாப்பு இல்லத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து, திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்திலிருந்து சிறுவனை தூத்துக்குடி ஆயுதப்படை போலீசார் அரசு பஸ்சில் நேற்று முன்தினம் அழைத்து வந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை டோல்கேட் அருகே வந்தபோது, திடீரென பஸ் பழுதடைந்து நின்றுவிட்டதாக கூறப் படுகிறது. இதனால், பஸ்சிலிருந்த பயணிகள் கீழே இறங்கியுள்ளனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திய சிறுவன், அங்கிருந்து தப்பி ஓடினான். இதைக்கண்டபோலீசார் விரட்டிச்சென்றனர். ஆனாலும், இரவுநேரம் என்பதால், சிறுவன் எந்தவழியாக தப்பினான் என கண்டுபிடிக்க முடியாமல் போனது.

    இதுகுறித்து தூத்துக்குடி போலீசார் உடனடியாக திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குணசேகரனுக்கு தகவல் தெரி வித்தனர்.

    டிஎஸ்பி உத்தரவின்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று தப்பியோடிய சிறுவனை தேடும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர்.

    டோல்கேட் அருகே உள்ள கரும் புத்தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, துாத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து,சிறுவனை பாதுகாப்பாக வேலுாருக்கு அழைத்துச்சென்றனர்.

    • புதுப்பாளையம் ஒன்றியத்தில் நடந்தது
    • சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஷார், காஞ்சி, புதுப்பாளையம், அம்மாபாளையம், இறையூர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலசபாக்கம் எம்.எல்.ஏ. சரவணன், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நகைகள் கொள்ளை
    • தனிபடை விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள சேந்தன்குன்று முருகன் பாத மலை மீது வள்ளி தேவசேனை சமேத ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த கோவிலில் சுமார் 7 அடி உயர ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கற்சிலையும், தலா சுமார் 6 அடி உயரமுள்ள வள்ளி, தேவசேனை கற்சிலைகளும் மூலவராக பக்தர்களுக்கு அருள்பா ளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு கோவில் பூசாரி விநாயகம் பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் கோவிலை திறந்த போது சுவாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    மர்ம நபர்கள் கோவில் பக்கவாட்டு தகர ஷீட்டை பெயர்த்துவிட்டு உள்ளே நுழைந்து ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தேவசேனை ஆகிய 3 சிலைகளின் தலை பாகங்களை முழுவதும் உடைத்து சேதப்படுத்தி யுள்ளனர்.

    மேலும் 3 சிலைகளின் கைபாகம் உள்ளிட்ட வற்றையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

    மேலும் வள்ளி, தேவசேனை கழுத்திலிருந்த 3 பவுன் மதிப்புள்ள இரு தங்கத் தாலிகள், பீரோவிலிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரூ.15 ஆயிரம்,

    கோயில் வளாகத்தி லிருந்த மின்ஜெனரேட்டர், ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் உள்ளிட்டவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.

    தகவலறிந்த நேற்று டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான வந்தவாசி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசார ணை மேற்கொண்டனர்.

    மேலும் திருவண்ணா மலையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த கோவிலில் பதிந்துள்ள கைரேகைகளை போலீசார் பதிவு செய்து வருகின்றனர். பின்னர் அந்த பகுதியில் பதிவான செல்போன் எண்களை ஆய்வு செய்து இன்ஸ்பெ க்டர் விஸ்வநாதன் தலைமை யிலான தனிப்ப டையினர் மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

    • கொலை செய்யப்பட்டாரா?
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    போளூர் தாலுக்கா 99 புதுப்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் மறைவான இடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பார்த்தபோது அவர் ஒரு பையில் திருப்பதி லட்டு மற்றும் துணி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    மேலும் இறந்தவர் எந்த ஊர் பெயர் தெரியவில்லை இறந்த நபர் முன்பு விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்து விட்டு இங்கு வந்து போட்டு விட்டு சென்று விட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பண்ணை குட்டை கரைகளை பலப்படுத்த அறிவுரை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர் (திண்டிவனம்) அப்பகுதியில் கலெக்டர் முகேஷ் பார்வையிட்டார்.

    அத்திமூர் பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் வாழை பூங்கா அமைப்பதற்கான தோட்டக்கலைத் துறைக்கு வழங்கப்பட இருக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து அத்திமூர் கிராமத்தில் பண்ணை குட்டை ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்த அறிவுரை வழங்கினார்

    மேலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் கழிவறை ஆய்வு செய்த கலெக்டர் கழிவறை தூய்மையாக வைத்துக் கொள்ளும் படியும் பள்ளி வளங்களை உள்ள குப்பைகளை அகற்றவும் அறிவுரை வழங்கினார்.

    இதில் போளூர் தாசில்தார் சண்முகம், போளூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழுதாகி நின்ற டிராக்டரில் மோதியது
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாந்தோனி மற்றும் பாலமுருகன் இவர்கள் இருவரும் கட்டிட வேலையில் சென்டிரிங் அமைக்கும் பணி செய்து வருகின்றனர்.

    இருவரும் செங்காடு கிராமத்தில் சென்ட்ரிங் வேலைக்கு நேற்று காலை சென்றனர். பின்னர் பணி முடித்து விட்டு மாலையில் கீழ்குவளைவேடு அருகே பைக்கில் வந்த கொண்டிரு ந்தனர். அப்போது சாலை ஓரத்தில் பழு தாகி டிராக்டர் ஒன்று நின்று கொண்டிருந்து. டிராக்டர் ஒன்றே நின்று கொண்டி ருந்ததை அறியாமல் டிராக்டரின் பின்னால் திடீரென எதிர்பாராத விதமாக மோதி உள்ளனர்.

    இதனால் தலையில் பலத்த காயமடைந்த ரத்த வெள்ளத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து வந்தவாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வந்தவாசி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது‌.

    சீட்டு பணம் எடுத்து துணிகரம்

    ஆரணி:

    ஆரணிஅருகே மொரப்பந்தாங்கள், ஒண்டி குடிசை கிருஷ்ணாவரம், மாமண்டூர், 12 புதூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் சீட்டு நடத்தி வந்துள்ளனர்.

    இவர்களிடம் 45 வயதுடைய நபர் ஒருவர் சீட்டு பணம் கட்டி அதனை பாதியிலேயே எடுத்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்து அந்த நபர் தலைமறைவாகி உள்ளார்.

    மேலும் பாதிக்கப்பட்டவர்கள் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    பணத்தை மோசடி செய்து தலைமறை வாகிவிட்ட அந்த நபர் மீது தனித்தனியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு புகாரை அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். 

    • பைக்கில் வந்தவர்களை தடுத்ததால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன் மார்க்கெட் ரோடு புதிய பஸ்நிலையம் பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கூட்ட நெரிசலை சீர் செய்வது வழக்கமாகும்.

    இந்நிலையில் ஆரணி காந்தி ரோட்டில் நேற்று போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையில் போக்குவரத்து போலீசார் ரோந்து பணி ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத ஒரே ஸ்கூட்டரில் 3 பேர் மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்களை செல்வகுமார் தடுத்து நிறுத்தினார்.

    போலீசாரை கண்டதும் ைபக்கில் வந்தவர்கள் தப்பிக்க முயன்றனர்.

    அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த நபரின் சட்டையை செல்வகுமார் இழுத்துள்ளார் இருப்பினும் பைக்கில் வந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

    இச்சம்பவம் குறித்து அங்குள்ள சிசிடி கேமரா காட்சியை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • 302 பேருக்கு வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப்பள்ளியில் பணி புரியும் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் 302 பேருக்கு எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்டம் பயிற்சி முகாம் தனியார் பள்ளியில் நடந்தது.

    இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.

    உடன் போளூர் வட்டார கல்வி அலுவலர் சுந்தர், நேரு, விரிவுரையாளர் வெங்கடேசன், ஆசிரியர் பயிற்றுநர் சேகர், பாஸ்கரன், ஆசைத்தம்பி, சுரேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பயிற்சி மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் மலர்விழி பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

    ×