என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் ரகளை
    X

    அரசு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் ரகளை

    • போலீஸ் நிலையம் முன்பு பஸ்சை நிறுத்திய டிரைவர்
    • போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் இருந்து சேத்துப்பட்டு, பெரணமல்லூர், செய்யார், சென்எனைக்கு அரசு பஸ் இயங்கி வருகிறது.

    இந்தப் பஸ் காலை, மாலை, இரு வேளையிலும் கல்லூரி நேரத்தில் செல்வதால் செய்யாறு, அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் இந்த பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

    நேற்று வழக்கம்போல் மாலை செய்யாறில் இருந்து பெரணமல்லூர், சேத்துப்பட்டு, வழியாக போளூர். நோக்கி பஸ் புறப்பட்டது. பஸ்சில் வழக்கம் போல் சுமார் 70-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.

    பஸ்சில் வந்த கலை கல்லூரி மாணவர்கள் ஒலி, எழுப்பியவாறு ரகளை செய்தும் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் வைத்தும் பயணிகளுக்கும், டிரைவர், கண்டக்டருக்கு, இடையூறு செய்து வந்தனர்.

    தொடர்ந்து இதை கண்டித்த டிரைவர், கண்டக்டர், இருவரும் மாணவர்களை எச்சரித்து வந்தனர்.ஆனால் மாணவர்கள் ரகளை செய்வதை நிறுத்தாமல் தொடர்ந்து இடையூறு செய்து வந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் பெரணமல்லூர், போலீஸ் நிலையத்தின் முன்பு திடீரென பஸ்சை நிறுத்திவிட்டு உள்ளே சென்று மாணவர் ரகளை குறித்து புகார் அளித்தார்.

    உடனடியாக கல்லூரி மாணவர்களை போலீசார் அழைத்து பயணிகளுக்கும் டிரைவருக்கும், ஓட்டுனருக்கும் நீங்கள் தொந்தரவு செய்யக்கூடாது ஒலிபெருக்கி மூலம் பாடல்களை அதிக ஒளி வைத்து மற்றவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.

    மேலும் மீறினால் தகுந்த நடவடிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    Next Story
    ×