என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு
    • அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது

    திருவண்ணாமலை:

    தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 7,200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடு வென உயர்ந்துள்ளது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டத்தில், பாதுகாப்பு கருதி117 அடி உயரம் வரை தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், அணைக்கு வரும் தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சாத்தனூர் அணையின் நீர் மட்டம் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 116.10 அடியாக உள்ளது. அணையில் 6,678 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3,900 கனஅடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் 4,980 கனஅடி தண்ணீரும், கால்வாய்களில் விநாடிக்கு 450 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 5,430 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    • போலீசார் கைது செய்து விசாரணை
    • திருமணம் செய்ய வற்புறுத்தல்

    சேத்துப்பட்டு:

    தேசூரை அடுத்த சிவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன் (வயது 26). இவருக்கும், பெரணமல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் வந்தவாசியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தபோது காதல் ஏற்பட்டது. சுமார் 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கோகுலகண்ணன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண்ணிடம் வற்புறுத்தினார்.

    அதற்கு அவர் எனது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்வேன் என கூறியுள்ளார்.

    இதனால் கோகுல கண்ணன் கல்லூரியில் படிக்கும்போது எடுத்த போட்டோக்களை காட்டி என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், இந்த போட்டோக்களை உறவினர்களிடம் காட்டு வேன். நீ எப்படி திருமணம் செய்து கொள்கிறாய் என்று பார்க்கிறேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அரசு வழக்குப்பதிவு செய்து கோகுல கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 475 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது
    • எராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை ஆகியவை சார்பில் நடந்த இந்த முகாமை வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் தொடக்கி வைத்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சு.வி.மூர்த்தி, ஆர்.குப்புசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி செயலர்கள், மக்கள் நல பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன், தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.

    முகாமில் மொத்தம் 475 பேருக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய மருந்துகள் வழங்கப்பட்டன.

    • வடிகால் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

    செங்கம்:

    கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் செங்கம் புதிய பஸ் நிலையம் முதல் போளூர் சாலை வரை மெயின் ரோட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், எல்ஐசி அலுவலகம் அமைந்துள்ள பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால்களுக்கு செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கின்றது.

    இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பாதசாரிகள் தேங்கியுள்ள தண்ணீரிலேயே நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. வாகன ஓட்டிகள் மழைநீரில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும் இதுபோன்று சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தி அதிகமாவதாக பொதுமக்கள் சார்பில் கூறப்படுகிறது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மழைநீர் வடிகால்களில் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அடுத்துள்ள புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த மருத்துவ முகாமினை புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரபியுல்லா, பி.பி.முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்வில் அரசு அலுவலர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எக்ஸ்ரே உள்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து ஆலோசனைகளும், சிகிச்சையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரம்
    • பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால் ஏரி, சேரியந்தல் ஏரி, நொச்சிமலை ஏரி, கீழ்நாத்தூர் ஏரி ஆகிய பகுதிகளில் நீர்வரத்து கால்வாய் செல்லும் பாதையை திருவண்ணா மலை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது கடலூர் சித்தூர் சாலை கலெக்டர் அலுவலகம் முதல் அறிவியல் பூங்கா வரை நடைபெற்று வரும் பக்கக்கால்வாய் மற்றும் சிறுபாலப் பணிகள் பாண்டி (திண்டிவனம் சாலை) நடைபெற்று வரும் சிறுபாலப்பணிகள் கடலூர் - சித்தூர் சாலையில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் 3 சிறுபாலம் அமைக்கும் பணிகள், கடலூர் சித்தூர் சாலையில் மழைநீர் வடிவதற்கு ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் பக்கக் கால்வாய் அமைக்கும் பணிகள், திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் மழைநீர் வடிவதற்கு ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணிகள், திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் ரூ.1.30 கோடிம மதிப்பீட்டில் 4 கல்வெட்டுகள் அமைக்கும் பணிகள், பாண்டி கிருஷ்ணகிரி சாலையில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் 3 கல்வெட்டுகள் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு போன்று இந்த ஆண்டு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய் அமைக்கும் பணிகளை இம்மாத இறுதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அவலூர்பேட்டை - திருவண்ணாமலை சாலையில் சிறுபாலத்தின் பக்கவாட்டில் உள்ள மண் குவியல்களை உடனடியாக அகற்றிடுமாறும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பா.முருகேஷ் அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் கோட்டப்பொறியாளர்மு ரளி, செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் வருவாய் கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியதேவ் ஆனந், பரமேஸ்வரன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தம்டகோடி மலையில் நடந்தது
    • பக்தர்கள் சாமி தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிபாளையம் தம்டகோடி மலையில் சுப்பிரமணி யசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் 13-ம்தேதி கிருத்திகை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிருத்திகை விரதமிருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    மேலும் இரவில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தங்கத் தேர் உற்சவம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷமிட்டபடி ஆடி பாடி சென்றனர்.

    • அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் 50-வது ஆண்டு பொன்விழா நிறைவு விழா மற்றும் 51-வது ஆண்டு துவக்க விழா முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில்:-

    வரும் 17-ந்தேதி அதிமுக 51-வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்.

    மேலும் 1972 முதல் தொடர்ந்து 50 ஆண்டுகளாக கட்சி பணி ஆற்றியவர்களுக்கு பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியால் வழங்கப்பட உள்ளது.

    இவர் அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், துணை செயலாளர் செல்வம், பொருளாளர் நைணாக்கண்ணு, இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுனில் குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பர்வதம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனி, மாவட்ட பேரவை துணைத் தலைவர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் தரணி, நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயசுதா, கலியபெ ருமாள், சரவணன், கோவிந்தராஜ், ராமச்சந்திரன், தொப்புளான், ஸ்ரீதர்

    ராகவன், மாவட்ட பிரதிநிதி சில்பிசஹானா, உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவியில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. விழா 10 நாட்கள் நடைபெறும் 7-ம் நாள் விழாவின் போது தேரோட்டம் நடைபெறும்.

    கொரோனா ஊரடங்கு காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளாக பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் கார்த்திகை தீபத் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும் என பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    தீப திருவிழா பணிகள் தீவிரமாக நடைந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் மாடவீதியில் நடைபெற உள்ளது.

    அதனைத்தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் ராஜகோபுரம் எதிரே நிறுத்தப்பட்டுள்ள பஞ்சமூர்த்திகள் தேர்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    முதலில் முருகர் தேரை தொடர்ந்து விநாயகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் சீரமைக்கும் பணிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது.

    • 5 பேர் காயம்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் நேற்று திறன் மேம்பாட்டு திருவிழா நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ஏராளமான இளைஞர்கள் வந்திருந்தனர். மேலபுஞ்சை கிராமத்தில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நபர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சி முடிந்து மினி வேன் ஒன்றில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது மினிவேன் புதுப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையின் அருகே இருந்த வயல்வெளியில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 5 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இது குறித்து புதுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 27-ந்தேதி தொடங்குகிறது.
    • மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி டிசம்பர் 6-ந்தேதி நடக்கிறது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை மாதத்தில் வரும் தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விழா 10 நாட்கள் நடைபெறும். இதில் 7-ம் நாள் விழாவின் போது தேரோட்டம் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணத்தினால் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டு அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் கார்த்திகை தீபத் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும் என பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் மாடவீதியில் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் ராஜகோபுரம் எதிரே நிறுத்தப்பட்டுள்ள பஞ்சமூர்த்திகள் தேர்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    முதலில் முருகர் தேரை தொடர்ந்து விநாயகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் சீரமைக்கும் பணிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது.

    • ஒரே வீட்டைச் சேர்ந்த 6 பேர் 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு சடங்குகளில் ஈடுபட்டனர்.
    • அனைவரும் காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    ஆரணி:

    கேரள மாநிலத்தில் அண்மையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்கள் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் உள்ளிட்ட சடங்குகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

    கேரளாவை போன்று இங்கும் நரபலி கொடுக்கப்படலாம் என வதந்தி பரவியது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்தபோது அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனடியாக ஜே.சி.பி. வாகனத்தை வரவழைத்த போலீசார் அதன் மூலம் வீட்டின் கதவை உடைத்தனர். தொடர்ந்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் அங்கு பூஜையில் ஈடுபட்டிருந்த 6 பேரை மீட்டனர். 


    காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த குடும்பத்தை சேர்ந்த நபருக்கு பேய் பிடித்து இருப்பதாகவும், அதற்காக பூஜை செய்து வந்ததாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் தங்கள் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளனர். வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    ×