என் மலர்
நீங்கள் தேடியது "நீ எப்படி திருமணம் செய்து கொள்கிறாய் என்று பார்க்கிறேன் என மிரட்டல்"
- போலீசார் கைது செய்து விசாரணை
- திருமணம் செய்ய வற்புறுத்தல்
சேத்துப்பட்டு:
தேசூரை அடுத்த சிவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன் (வயது 26). இவருக்கும், பெரணமல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் வந்தவாசியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தபோது காதல் ஏற்பட்டது. சுமார் 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோகுலகண்ணன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண்ணிடம் வற்புறுத்தினார்.
அதற்கு அவர் எனது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்வேன் என கூறியுள்ளார்.
இதனால் கோகுல கண்ணன் கல்லூரியில் படிக்கும்போது எடுத்த போட்டோக்களை காட்டி என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், இந்த போட்டோக்களை உறவினர்களிடம் காட்டு வேன். நீ எப்படி திருமணம் செய்து கொள்கிறாய் என்று பார்க்கிறேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அரசு வழக்குப்பதிவு செய்து கோகுல கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






