என் மலர்
நீங்கள் தேடியது "நீர்வரத்து கால்வாய்கள் கலெக்டர் ஆய்வு"
- ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரம்
- பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால் ஏரி, சேரியந்தல் ஏரி, நொச்சிமலை ஏரி, கீழ்நாத்தூர் ஏரி ஆகிய பகுதிகளில் நீர்வரத்து கால்வாய் செல்லும் பாதையை திருவண்ணா மலை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது கடலூர் சித்தூர் சாலை கலெக்டர் அலுவலகம் முதல் அறிவியல் பூங்கா வரை நடைபெற்று வரும் பக்கக்கால்வாய் மற்றும் சிறுபாலப் பணிகள் பாண்டி (திண்டிவனம் சாலை) நடைபெற்று வரும் சிறுபாலப்பணிகள் கடலூர் - சித்தூர் சாலையில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் 3 சிறுபாலம் அமைக்கும் பணிகள், கடலூர் சித்தூர் சாலையில் மழைநீர் வடிவதற்கு ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் பக்கக் கால்வாய் அமைக்கும் பணிகள், திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் மழைநீர் வடிவதற்கு ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணிகள், திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் ரூ.1.30 கோடிம மதிப்பீட்டில் 4 கல்வெட்டுகள் அமைக்கும் பணிகள், பாண்டி கிருஷ்ணகிரி சாலையில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் 3 கல்வெட்டுகள் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு போன்று இந்த ஆண்டு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய் அமைக்கும் பணிகளை இம்மாத இறுதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அவலூர்பேட்டை - திருவண்ணாமலை சாலையில் சிறுபாலத்தின் பக்கவாட்டில் உள்ள மண் குவியல்களை உடனடியாக அகற்றிடுமாறும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பா.முருகேஷ் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கோட்டப்பொறியாளர்மு ரளி, செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் வருவாய் கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியதேவ் ஆனந், பரமேஸ்வரன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.






