என் மலர்
நீங்கள் தேடியது "சாலையில் தேங்கியுள்ள மழை வெள்ளம்"
- வடிகால் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
செங்கம்:
கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் செங்கம் புதிய பஸ் நிலையம் முதல் போளூர் சாலை வரை மெயின் ரோட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், எல்ஐசி அலுவலகம் அமைந்துள்ள பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால்களுக்கு செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கின்றது.
இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பாதசாரிகள் தேங்கியுள்ள தண்ணீரிலேயே நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. வாகன ஓட்டிகள் மழைநீரில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இதுபோன்று சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தி அதிகமாவதாக பொதுமக்கள் சார்பில் கூறப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மழைநீர் வடிகால்களில் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.






