ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

302 பேருக்கு வழங்கப்பட்டது ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்
Published on

போளூர்:

போளூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப்பள்ளியில் பணி புரியும் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் 302 பேருக்கு எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்டம் பயிற்சி முகாம் தனியார் பள்ளியில் நடந்தது.

இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.

உடன் போளூர் வட்டார கல்வி அலுவலர் சுந்தர், நேரு, விரிவுரையாளர் வெங்கடேசன், ஆசிரியர் பயிற்றுநர் சேகர், பாஸ்கரன், ஆசைத்தம்பி, சுரேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பயிற்சி மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் மலர்விழி பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com