என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The police are recording the fingerprints found in the temple"

    • நகைகள் கொள்ளை
    • தனிபடை விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள சேந்தன்குன்று முருகன் பாத மலை மீது வள்ளி தேவசேனை சமேத ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த கோவிலில் சுமார் 7 அடி உயர ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கற்சிலையும், தலா சுமார் 6 அடி உயரமுள்ள வள்ளி, தேவசேனை கற்சிலைகளும் மூலவராக பக்தர்களுக்கு அருள்பா ளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு கோவில் பூசாரி விநாயகம் பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் கோவிலை திறந்த போது சுவாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    மர்ம நபர்கள் கோவில் பக்கவாட்டு தகர ஷீட்டை பெயர்த்துவிட்டு உள்ளே நுழைந்து ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தேவசேனை ஆகிய 3 சிலைகளின் தலை பாகங்களை முழுவதும் உடைத்து சேதப்படுத்தி யுள்ளனர்.

    மேலும் 3 சிலைகளின் கைபாகம் உள்ளிட்ட வற்றையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

    மேலும் வள்ளி, தேவசேனை கழுத்திலிருந்த 3 பவுன் மதிப்புள்ள இரு தங்கத் தாலிகள், பீரோவிலிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரூ.15 ஆயிரம்,

    கோயில் வளாகத்தி லிருந்த மின்ஜெனரேட்டர், ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் உள்ளிட்டவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.

    தகவலறிந்த நேற்று டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான வந்தவாசி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசார ணை மேற்கொண்டனர்.

    மேலும் திருவண்ணா மலையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த கோவிலில் பதிந்துள்ள கைரேகைகளை போலீசார் பதிவு செய்து வருகின்றனர். பின்னர் அந்த பகுதியில் பதிவான செல்போன் எண்களை ஆய்வு செய்து இன்ஸ்பெ க்டர் விஸ்வநாதன் தலைமை யிலான தனிப்ப டையினர் மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

    ×