என் மலர்
திருவண்ணாமலை
- விடுதிக்கு செல்ல மறுத்து விபரீதம்
- போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே சம்மந்தனூர் கிராமத்தைச்சேர்ந்த வர் ராஜேஸ்வரி. இவரது மகள் கலையரசி (வயது 16), இவர் ஆனாய்பிறந்தான் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி திருவண்ணாமலையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- 1 படித்து வந்தார்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையில் சம் மந்தனூரில் உள்ள வீட்டிற்கு மாணவி வந்தார். பண்டிகை முடிந்து மீண்டும் விடுதிக்கு செல்ல மனமின்றி கடந்த 18-ந் தேதி மாணவி வீட்டில் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் முனீஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தாயுடன் அக்காவை அழைத்து வர சென்ற போது பரிதாபம்
- டிரைவர் கைது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே உள்ள பூதமங்கலம் கொரக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி கூலி தொழிலாளி. இவரது மனைவி கல்பனா, மகள்கள் பிரிஸ்திகா, ஜெயஷ்டிகா (வயது 2).
மூத்த மகள் பிரிஸ்திகா தேவிகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்று பள்ளிக்குச் சென்று விட்டு பள்ளி வேனில் வீடு திரும்பினார். வீட்டின் அருகே வேன் நின்றதும் அவரது தாயார் கல்பனா பிரிஸ்திகாவை அழைத்து வர சென்றார். அப்போது தனது அக்காவை பார்ப்பதற்காக தாயை பின் தொடர்ந்து ஜெயஸ்டிஸ்கா ஓடினாள் . கல்பனா வேனின் பின்பக்கமாக சென்று மூத்த மகளை எடுத்துள்ளார்.
அந்த நேரத்தில் வேனின் முன்பக்கமாக 2 வயது குழந்தை ஜெயஸ்டிகா ஓடியது. இதனை அறியாமல் டிரைவர் வண்டியை எடுத்துள்ளார். இதனால் வேன் சக்கரத்தில் ஜெயஸ்டிகா சிக்கினாள். இதனை கண்டு கல்பனா அலறி கூச்சலிட்டார்.
வேனில் சிக்கிய ஜெயஸ்டிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை கண்டு அவர் தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து டிரைவர் பெருமாளை கைது செய்தனர்.
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- மின் அதிகாரி தகவல்
செய்யாறு:
செய்யாறு கோட்டம் சிருங்கட்டூர் துணை மின் நிலையத்தில் நாளை 21-ந்தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செய்யாறு, திருவத்திபுரம், பெருங்கட்டூர், கொர்க்கை, வாழ்குடை, பெரும்பள்ளம், செங்காடு, ராந்தம், பல்லி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
- ரூ.20 லட்சத்தில் கட்டப்படுகிறது
- சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலசப்பாக்கம் தாலுக்கா எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் கலசப்பாக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தி.சரவணன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க கூறினார்.
அப்போது கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், பி.டி.ஓ. சத்தியமூர்த்தி ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார் நகர செயலாளர் சவுந்தர்ராஜன் ஒன்றிய கவுன்சிலர் செண்பகவல்லி ஊராட்சி மன்ற தலைவர் வித்யாபிரசன்னா உட்பட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- ஆன்மிக சுற்றுலா வந்த பெண்களை கேலி, கிண்டல் செய்ததால் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் மட்டுமின்றி பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. இதனை காண வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வெளிநாட்டினர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமங்கள் மற்றும் விடுதிகளில் தங்கி மன அமைதிக்கான தியானங்கள் மற்றும் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மும்பையை சேர்ந்த மித்தேஷ் தக்கர் என்பவரின் மனைவி ரேபக்கா தக்கர் (வயது 40) என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 20-ந் தேதி வெளிநாட்டை (சுவிட்சர்லாந்து) சேர்ந்த 2 இளம்பெண்களுடன் ஆன்மிக சுற்றுலாவிற்காக திருவண்ணாமலைக்கு வந்தார்.
பின்னர் அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள தனியார் அறக்கட்டளை விடுதியில் தங்கினர். இதையடுத்து அவர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் பல்வேறு ஆசிரமங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி திருவண்ணாமலை செங்கம் சாலையில் சேஷாத்திரி ஆசிரமத்தின் அருகில் அவர்கள் செல்லும் போது அந்த பகுதியில் பல்வேறு வெளி மாநில பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வந்த ஜம்மு காஷ்மீர் பட்கம் பகுதியை சேர்ந்த அப்துல்ரஷித் என்பவரின் மகன் முபாஷிர் ரஷீத் (22) என்பவர் அவர்களை கேலி, கிண்டல் செய்து உள்ளார்.
இது குறித்து ரேபக்கா தக்கர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாஷிர் ரஷீத்தை கைது செய்தனர்.
- மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஜி.என்.பாளையத்தில் நேற்று எருது விடும் திருவிழா நடைபெற்றது.
ஜி.என்.பாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செங்கம் சுற்றுவட்ட பகுதியிலிருந்து ஏராளமான காளைகள் கலந்து கொண்டு ஓடியது.
இந்த நிகழ்வில் மிக வேகமாக குறிப்பிட்ட எல்லையை குறித்த நேரத்தில் கடந்த மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் புதுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.
- நிவாரண உதவி வழங்க வலியுறுத்தல்
- போலீசார் பேச்சுவார்த்ைத
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி சாந்தி (வயது 58). இவர் நேற்று வீட்டில் இருந்து ஆதமங்கலம் புதூர் செல்லும் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்து மோதியதில் சாந்தி படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கடலாடி போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்த போது திடீரென சாந்தியின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்தில் இறந்த சாந்தி குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என உறவினர்கள் கோஷமிட்டனர்.
தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து இறந்த வருக்கு நிவாரணம் உதவி வழங்க முடியாது. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- கோதண்டத்தை காரில் கடத்தி சென்று கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.
- ஆரணி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டம் (வயது 68) பட்டு சேலை வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் மாவட்ட அவை தலைவராக பதவி வகித்தார்.
ஆகாராம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இருவருக்கும் இடையே ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.
இதனால் சரவணன் கோதண்டத்தை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இது குறித்து அவரது டிரைவர் குமரன் என்பவரிடம் கூறினார்.
இருவரும் சேர்ந்து சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் குட்டி என்கிற தணிகாலத்தை தொடர்பு கொண்டனர். அவர் இந்த கொலைக்கு ரூ.10 லட்சம் வரை பேரம் பேசினார். முதல் கட்டமாக ரூ.6 லட்சம் அவரிடம் கொடுத்தனர்.
கடந்த 5-ந் தேதி செய்யார் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த கோதண்டத்தை காரில் கடத்தி சென்று கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.
பின்னர் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள தெலுங்கு கங்கை கால்வாயில் உடலை வீசி சென்று விட்டனர்.
கோதண்டம் மாயமானது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் கொலை செய்து வீசப்பட்டது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து சரவணன், டிரைவர் குமரன் சென்னை குன்றத்துரை சேர்ந்த கூலிப்படை தலைவன் குட்டி என்கிற தணிகாசலம், நேருஜி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமையில் தனிப்படை போலீசார் சென்னையில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.நேற்று கூலிப்படையை சேர்ந்த ஸ்ரீதர் (34), வீரமணி (31), வினோத் (24) ஆகியோரை கைது செய்தனர்.
- ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமை கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள்.
- இடைக்கால பொதுச்செயலாளர் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அ.தி.மு.க. ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை தொடர்ந்து அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை நாங்கள் எங்களுடைய குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். அதனை மக்கள் அனைவரும் அறிந்தது. ஆனால் தற்போது பொய் வாக்குறுதிகளை கண்டு ஏமாந்து விட்டோமே என்றும், தி.மு.க. அரசை எப்போது வீட்டிற்கு அனுப்புவது என்றும் மக்கள் ஏக்கத்தோடு உள்ளனர்.
தற்போது பாலியல் பலாத்காரம், வன்முறைகள், வரி சுமைகள் அத்தனையும் மக்களால் தாங்கி கொள்ள முடியாத சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான எண்ணங்களில் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமை கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அ.தி.மு.க. ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடும். சசிகலா அ.தி.மு.க. தலைமையை சந்திக்க உள்ளதாக கேலிகூத்தாக சொல்லி கொண்டு இருக்கிறார். நிச்சயமாக அது நடைபெறுவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை.
தலைமை கழகத்தை சூறையாடிவர்களை மீண்டும் இந்த கட்சியில் சேர்ப்பது என்றால் கட்சி தொண்டர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவண்ணாமலையில் தமிழ்மகன் உசேன் பேட்டி
- பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் இ.என்.நாராயணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தொடர்ந்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா இந்தியா முழுவதும் எம்.ஜி.ஆர். மன்றத்தினர் மற்றும் கட்சி தொண்டர்கள் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை நாங்கள் எங்களுடைய குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். அதனை மக்கள் அனைவரும் அறிந்தது. ஆனால் தற்போது பொய் வாக்குறுதிகளை கண்டு ஏமாந்து விட்டோமே என்றும், தி.மு.க. அரசை எப்போது வீட்டிற்கு அனுப்புவது என்றும் மக்கள் ஏக்கத்தோடு உள்ளனர்.
தற்போது பாலியல் பலாத்காரம், வன்முறைகள், வரிசுமைகள் அத்தனையும் மக்களால் தாங்கி கொள்ள முடியாத சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான எண்ணங்களில் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமை கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அ.தி.மு.க. ஈரோடு இடைத் தேர்தலில் வெற்றி வாகை சூடும். சசிகலா அ.தி.மு.க. தலைமையை சந்திக்க உள்ளதாக கேலிகூத்தாக சொல்லி கொண்டு இருக்கிறார். நிச்சயமாக அது நடைபெறுவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை.
தலைமை கழகத்தை சூறையாடிவர்களை மீண்டும் இந்த கட்சியில் சேர்ப்பது என்றால் கட்சி தொண்டர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சரவணன், கலியபெருமாள், பாசறை செயலாளர் பருவதம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணை செயலாளர் தரணி, மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தீயணைப்பு துறையினர் மீட்டனர்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அருகே மேலபூஞ்சை கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 50). இவருடைய மகள் சாதனா (15). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் அவர் திடீரென மாயமானார்.
இதையடுத்து பாய்ச்சல் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பே ரில் சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தர்மலிங்கத் துக்கு சொந்தமான வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் மாணவி பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து செங்கம் தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்களின் உதவியுடன் கிணற்றில் இருந்து மாணவி உடலை மீட்டனர்.
போலீஸ் விசாரணையில் கால்நடைகளை பிடித்து சென்ற போது கால் தவறி கிணற்றில் சாதனா விழுந்து இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- நவகிரக, மகாலட்சுமி ஹோமங்கள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கொட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சிவனடியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது.
பின்னர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவனடியார்கள் கைலாய மேளங்கள் முழங்க கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் மங்கள மேள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அகத்தீஸ்வரரை தரிசனம் செய்து சென்றனர்.






