search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ox slaughtering ceremony"

    • மாடுகளை வண்ண மலர்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்
    • காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா இன்று நடைபெற்றது.

    இதில் திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன. மாடுகளை அதன் உரிமையாளர்கள் வண்ண மலர்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்.

    காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்க ப்பட்டிருந்தன. சாலை நடுவே மண் மற்றும் தேங்காய் நார் கொட்டப்பட்டிருந்தது. விழா தொடங்குவதற்கு முன்னதாக காளைகளுக்கு வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தனர். இதனை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப் பாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.

    விழாவில் மாடு முட்டி காயம் அடைந்தவர்களை, அங்கு முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • மருத்துவ குழுவினர் முகாமிட்டிருந்தனர்
    • 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சிறுமூரில் உள்ள ஸ்ரீ சிறுபாத்தம்மன் கோவிலில் ஆடி 4-ம் வெள்ளி திருவிழா கோலாகலமாக நடந்தது.

    இதனையொட்டி இன்று எருது விடும் திருவிழா நடந்தது. விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்க ப்பட்டிருதது. சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடைபெறும் இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

    காளைகளை அதன் உரிமையாளர்கள் வண்ண, வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர். இந்த நிலையில் காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியும், 8 மணியளவில் எருது விடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின.

    தெருவில் சீறிபாய்ந்து ஓடிய காளைகளை, பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.

    • இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது
    • 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர் காவல்துறை தயார் நிலையில் இருந்தனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் எருது விடும் திருவிழா இன்று நடந்தது.

    இதனையொட்டி விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருதது.

    சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடைபெறும் இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

    காளைகளை அதன் உரிமையாளர்கள் வண்ண, வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியும், 8 மணியளவில் காளை விடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின. தெருவில் சீறிபாய்ந்து ஓடிய காளை களை, பார்வை யாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.

    • எருது விடும் விழா நடந்தது
    • 180 காளைகள் பங்கேற்றன

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

    முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆர். கிருபாகரன், மாவட்ட கவுன்சிலர் ஜெ. சிந்துஜா ஜெகன், முன்னாள் தலைவர் கண்ணதாசன், ஊராட்சி மன்ற தலைவர் மாதவன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய கவுன்சிலர் ஆ.கலா ஆஞ்சி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு எருது விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் 180 காளைகள் போட்டியில் பங்கேற்றன.

    போட்டியில் பிறகு குறைந்த நேரத்தில் இலக்கை நோக்கி வேகமாக ஓடிய காளைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், 2-வது பரிசாக 77 ஆயிரத்து 777, 3-வது பரிசாக 66 ஆயிரத்து 666 என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவில் மாடுகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    • 350-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன
    • பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்

    வேலூர்:

    வேலூர் அடுத்த லத்தேரி அருகே உள்ள சோழமூர் ராமாபுரம் கிராமத்தில் எருது விடும் திருவிழா இன்று நடந்தது.

    இதனையொட்டி விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருதது.

    சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடைபெறும் இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

    காளைகளை அதன் உரிமையாளர்கள் வண்ண, வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியும், 10 மணியளவில் காளை விடும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின. தெருவில் சீறிபாய்ந்து ஓடிய காளைகளை, பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.  

    • எருது விடும் விழா நடந்தது
    • குறைந்த நேரத்தில் சீறிப்பாய்ந்து இலக்கையடைந்த காளைகளுக்கு பரிசு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி வெள்ளைய கவுண்டனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி கலந்து கொண்டு எருது விடும் திருவிழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    விழாவில் திருப்பத்தூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மிட்டூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன. குறைந்த நேரத்தில் சீறிப்பாய்ந்து இலக்கையடைந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு விழாவை கண்டு ரசித்தனர். மந்தையில் ஓடி சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 8 பேரை காளைகள் முட்டி படுகாயமடைந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு அங்கு இருந்த மருத்துவ குழுவினர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விழாவில் பாதுகாப்பு கருதி காவல்துறையினர், வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஒருவர் பலியானதையடுத்து நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் கிராமம் சாமுண்டி வட்டத்தில் கடந்த 29-ந் தேதி 9-ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.

    இந்த எருது விடும் விழாவில் காண வந்த பொது மக்கள் மற்றும் காளைகளை அடக்க முயன்ற 27 பேர் காயமடைந்தனர்.

    மேலும் இதில் பாச்சல் பகுதியைச் சேர்ந்த திருப்பதி, சின்னகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவகுமார், அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், மற்றும் அச்சமங்கலம் பழனி வட்டம் பகுதியைச் சேர்ந்த குசேலன் மகன் விக்ரம் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

    இதனால் அங்கிருந்து மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் விக்ரம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வழக்குபதிவு. இது சம்பந்தமாக அச்சமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் ஜோலார்பேட்ட போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு விழா குழுவினர் சீனிவாசன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்
    • கலெக்டர் அறிக்கை

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில், எருதுவிடும் விழா நடத்துவது தொடர்பாக அரசினால் தெரிவித்துள்ள கட்டுபாடுகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    அனுமதி அளிக்கபட்ட கிராமங்களில் மட்டுமே எருதுவிடும் விழாக்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் ஒரு சில கிராமங்களில் கட்சி சார்பாகவும், அமைப்புகள் சார்பாகவும் மாடு விடும் விழா நடத்தப்படும் என சுவரொட்டிகள், பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுவது தெரியவருகின்றது.

    இது நெறிமுறைகளை மீறிய செயலாகும். கட்சி சார்பாகவும், அமைப்புகள் சார்பாகவும் சுவரொட்டிகள், பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு எருதுவிடும் விழா நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் அந்த விழாவினை தடைசெய்வதுடன், இனி வருங்காலங்களில் அந்த கிராமத்தின் பெயரை அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்ப இயலாது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்து எருதுவிடும் விழாவினை விழாக்குழுவினர்கள் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எருது விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சி, ஜங்கலாபுரம் பூசாரியூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நேற்று நடைபெற்றது.

    இதற்கு முன்னதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை எருது விடும் விழா நடத்தப்பட்டது.

    முன்னதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் விழா குழுவினருடன் உறுதி மொழி ஏற்றனர் எருது விடும் விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    மேலும் இந்த விழாவில் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 200 காளைகள் போட்டியில் பங்கேற்றன. விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ரசிகர்கள் பங்கேற்றனர். மேலும் போட்டியில் பங்கேற்று சீறிப்பாய்ந்த ஓடின. இதில் காளைகள் முட்டி 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்க ளுக்கு அங்குள்ள மருத்துவ குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எருது விடும் திருவிழா மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என். கே. ஆர். சூர்யா குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    மேலும் இவ்விழாவில் வாணியம்பாடி டிஎஸ்பி கள் விஜயகுமார் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி நிலவழகன் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் என சுமார் 140 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் வருவாய் துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • எருது விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணி

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் ஊராட்சி, சீலேரி கிராமத்தில் பொன்னி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைப்பெற்றது.

    இதில் அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பென் காந்தி, கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு எருது விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    விழாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு இருந்தனர். வாடிவாசலில் இருந்து காலை 10 மணி முதல் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகள் ஓடும் பாதையில் இளைஞர்கள் வழிமறித்து நின்று இருந்ததால் பல காளைகள் வழி தெரியாமல் ஓடுப்பாதையில் இருந்த இளைஞர்களை தூக்கி வீசி சென்றனர்.

    இதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதனையடுத்து பகல் 2 மணிக்கு காைள விடும் விழா முடிவடைந்தது. முதல் பரிசாக ரூ.55 ஆயிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மொத்தம் 41 பரிசுகள் வழங்கப்பட்டன.

    பாதுகாப்பு பணியில் வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு, பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணகரன், அணைக்கட்டு சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நாட்டறம்பள்ளி ஆத்தூர் குப்பம் கிராமத்தில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது
    • விதிமுறைகள் குறித்து விழா குழுவினருக்கு அறிவுரை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே எருது விடும் திருவிழா நடைபெறுவதற்கு மந்தைக்கு கால் நடுவதற்கு வட்டாட்சியர் நேரில் சென்று மண்ணின் உறுதித்தன்மை ஆய்வு செய்தார்.

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சியில் எருது விடும் திருவிழா வருகின்ற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி எருது விடும் காளை செல்லும் காளைகள் ஓடும் பாதையில் மந்தைகள் கட்டுவதற்காக பூஜைகள் போடப்பட்டது.

    அதிகாரி ஆய்வு

    இதனையடுத்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் குமார் நேரில் சென்று மண்ணின் உறுதித்தன்மை ஆய்வு மேற்கொண்டு காளை விடுவதற்கான விதிமுறைகளை விழா நடத்தும் குழுவினருக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காளைகளை ஒரே ஒரு முறை மட்டும் தான் விடவேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து திருவிழா நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர் காளை உரிமையாளர்கள் காளை விடும் இடத்தை ஆய்வு மேற்கொண்டு முன் அனுமதி சீட்டு பெற்று வருகின்றனர்.

    ஆய்வின்போது வருவாய் அலுவலர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் கூத்தாண்டகுப்பத்தில் எருது விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அடுத்த கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. 250க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது இதில் 14 பேர் படுகாயமடைந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 250 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 60,000 ரூபாயும் இரண்டாவது பரிசாக 45,000 ரூபாயும் மூன்றாவது பரிசாக 31000 ரூபாய் என மொத்தம் 46 பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த எருது விடும் விழாவில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் விழா குழுவினர் முன்னதாக உறுதி மொழி ஏற்றனர்.

    அதன் பிறகு வருவாய் துறை அதிகாரிகளின் முறையான அனுமதியுடன் தீயணைப்பு துறை மருத்துவ துறை கால் நடை மருத்துவர்கள் பரிசோதனை பிறகு எருது விடும் விழாவில் காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு உரிய பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெற்றது.

    இந்த எருது விடும் திருவிழாவில் சுமார் 5000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மாடு முட்டியதில் சுமார் 14 பேர் படுகாயமடைந்தனர்.

    இதில் 2 பேர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×