search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எருது விடும் விழா வசூல் பணத்தில் கிராமம் முழுக்க கண்காணிப்பு கேமரா அமைத்த பொதுமக்கள்
    X

    ப. முத்தம்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    எருது விடும் விழா வசூல் பணத்தில் கிராமம் முழுக்க கண்காணிப்பு கேமரா அமைத்த பொதுமக்கள்

    • போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியம் ப.முத்தம்பட்டி ஊராட்சியில் கடந்த வாரம் எருது விடும் திருவிழா நடைபெற்ற போது அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    கண்காணிப்பு கேமரா பொருத்தம்

    அதன்படி எருது விடும் திருவிழாவில் எருதுகள் போட்டியில் பங்கேற்க பணம் வசூலிக்கப்பட்டது. எருது விடும் திருவிழா நடத்தி வசூலான தொகையில் ரூ.1 லட்சம் செலவில் ப.முத்தம்பட்டி பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவது என ஊர் பொதுமக்கள் தீர்மானிக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா ஊராட்சி எல்லை ஆரம்பம், மற்றும் எல்லை முடிவு ஊர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 8, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி முருகன் கோயிலில் நடைபெற்றது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் முறையாக ஊராட்சி முழுவதும் கண்காணிப்பு கேமரா (மூன்றாவது கண்) ஊர் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்டுதால் இந்த பகுதியில் குற்றம் குறையும்,, முன்பு குற்றங்களை யார் செய்தார்கள் என தெரியும் நவீன காலத்தில் யார் குற்றம் செய்வார்கள் என தெரியவில்லை கல்லூரி மாணவன் பணத்திற்காக செயின் அறுப்பதும் போன்ற குற்ற செயல்கள் நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக போலீசாருக்கு உதவியது கண்காணிப்பு கேமரா அவர்கள் ஆரம்பம் முதல் சென்றது வரை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி செல்போன் எண் மூலம் குற்றங்களை கண்டுபிடிக்க உதவியது.

    இதேபோல அனைத்து ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி குற்றம் மற்றும் விபத்தில் மாவட்டம் உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார் நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் அகிலன்,, உட்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் பேசினார்கள்.

    பின்ன செய்தியாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    முத்தம்பட்டி கிராமத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுகோளை ஏற்று ஊர் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட செயல் பாராட்டுக்குரியது. மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் பங்களிப்போடு தொடர்ந்து செய்து வருகிறோம்.

    இந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா அந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் வைபை மூலம் இணைக்கப்பட்டுள்ளது இந்த பகுதியில் திருட்டு மற்றும் விபத்துகள் நடைபெற்றால் உடனடியாக அங்கிருந்து கண்காணிக்க முடியும் என்றார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×