என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆம்பூர் அருகே எருது விடும் திருவிழா குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.
2 கிராமங்களில் எருது விடும் விழா நடத்துவது குறித்து அதிகாரி ஆய்வு
- அடுத்த வாரம் விழா நடத்த ஏற்பாடு
- பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா நரியம்பட்டு ஊராட்சி மற்றும் வீராங்குப்பம் ஊராட்சியில் எருது விடும் திருவிழா நடத்துவது குறித்து நடந்து வரும் பணிகளை வாணியம்பாடி உதவி கலெக்டர் பிரேமலதா ஆம்பூர் தாசில்தார் மகாலட்சுமி மற்றும் வருவாய் துறையினர் உமராபாத் காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
அடுத்த வாரம் 2 ஊராட்சிகளிலும் திருவிழா மற்றும் எருது விடும் திருவிழா நடைபெறுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து எருது விடும் சாலை சரியாக இருக்கிறதா பொது மக்களுக்கு இடையூறாக உள்ளதா மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
Next Story