என் மலர்
உள்ளூர் செய்திகள்

கீழ்பென்னாத்தூர் அருகே பிளஸ்-1 மாணவி தற்கொலை
- விடுதிக்கு செல்ல மறுத்து விபரீதம்
- போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே சம்மந்தனூர் கிராமத்தைச்சேர்ந்த வர் ராஜேஸ்வரி. இவரது மகள் கலையரசி (வயது 16), இவர் ஆனாய்பிறந்தான் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி திருவண்ணாமலையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- 1 படித்து வந்தார்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையில் சம் மந்தனூரில் உள்ள வீட்டிற்கு மாணவி வந்தார். பண்டிகை முடிந்து மீண்டும் விடுதிக்கு செல்ல மனமின்றி கடந்த 18-ந் தேதி மாணவி வீட்டில் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் முனீஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.






